குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி, 'வண்ணாரப்பேட்டையில் காவல்துறையினரின் அத்துமீறலைக் கண்டித்தும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் எதிர்த்தும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரினோம். ஆனால், முதலமைச்சர் அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
அது மட்டுமின்றி, அங்கு தடியடியில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காமல், பொது மக்கள் தவறு செய்தது போல இங்கு முதலமைச்சர் விளக்கம் ஒன்று அளித்திருக்கிறார். எனவே, இதனைக் கண்டித்து பிப்ரவரி 19 ஆம் தேதி சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளோம். அமைதியான முறையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்கும் சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் நிச்சயமாக நடைபெறும்' என்றார்.
இதையும் படிங்க: வண்ணாரப்பேட்டை விவகாரத்தில் முதலமைச்சர் மீது ஸ்டாலின் கடும் தாக்கு