சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு தொடர்பாக, நாகப்பட்டினம் உறுப்பினர் தமிமுன் அன்சாரி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்துப் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “மழை வெள்ளக் காலத்தின்போது எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 24 மணி நேரமும் மழை வெள்ள கட்டுப்பாட்டு மையம் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. அந்த மையத்தை முதலமைச்சரே நேரில் சென்று பார்வையிட்டார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய வகையில் இழப்பீடு சென்று சேர்கிறதா என்றும் முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். மத்திய குழுவினரும் தமிழகத்திற்கு வந்து மழை வெள்ள பாதிப்புகளை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 1,114.9 கோடி ரூபாய் இழப்பீட்டு நிதியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வங்கிகள் மூலமாக செலுத்தப்பட்டுள்ளது. ஆகவே, எத்தனை பேரிடர் வந்தாலும் அதனை எதிர்கொள்ள இந்த அரசு தயாராகவே இருக்கிறது” என்றார்.
இதையும் படிங்க: உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடி பாமகவுக்கு கிடைத்த வெற்றி: முதலமைச்சருக்கு ராமதாஸ் நன்றி!