ETV Bharat / city

நீட் விலக்கு மசோதா: மத்திய அரசுக்குப் பதில் கடிதம் அனுப்பப்படும் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

நீட் விலக்கு மசோதா குறித்து சட்ட ரீதியான பதில்களை தயார் செய்து, முதலமைச்சரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவரின் ஒப்புதலுடன் மத்திய அரசுக்குப் பதில் கடிதம் அனுப்பப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சுப்ரமணியன்
அமைச்சர் சுப்ரமணியன்
author img

By

Published : Jul 20, 2022, 3:03 PM IST

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 'தேசிய பிளாஸ்டிக் அறிவை சிகிச்சை தினம்' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு இதயவியல் கண்காட்சி மற்றும் புதிதாக சீரமைக்கப்பட்ட கருத்தரங்கை திறந்து வைத்தார்.

பின்னர் இவ்விழாவில் உரையாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு ஆஞ்சியோ அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றுள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அரசின் காப்பீட்டுத்திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர். தேசிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தினத்தை முன்னிட்டு இன்று(ஜூலை.20) நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த சிகிச்சை மக்களுக்கு மேலும் பயனளிக்க வேண்டும்’ எனப் பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”நீட் தேர்வைப் பொறுத்தவரை விலக்கு பெற வேண்டும் என்பது தான் தமிழ்நாடு அரசின் கொள்கை. இரண்டு முறை சட்ட முன்வடிவுகளை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம். இதுதொடர்பாக மத்திய அரசு கடந்த மாதம் 21 மற்றும் 26ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கு பதில் அனுப்பியுள்ளது.

ஆனால், பதில் கடிதம் கடந்த 5ஆம் தேதி தான் ஆளுநர் மாளிகை மூலம் கிடைக்கப்பெற்றது. மத்திய அரசு, தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியுள்ள குறிப்பில், இந்த மசோதாவை நிறைவேற்ற சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளதா?, சட்ட மசோதா மத்திய அரசு வரம்புக்குள் வருகிறதா? நீட் தகுதி அடிப்படையிலான தேர்வு என்றும்; வரலாற்றுச் சீர்திருத்தங்களை உருவாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் நீட் அரசியலமைப்புச்சட்டத்தை மீறுகிறதா? தேசிய கல்விக்கொள்கைக்கு முரணானதா? நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறதா? நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற மாநில சட்ட வரம்புக்குள் வருமா? தேசிய ஹோமியோபதி ஆணையச்சட்டம், தேசிய மருத்துவ ஆணைய சட்டங்களைப் பாதிக்கிறதா? இதற்கான அதிகாரம் மத்திய அரசின் வரம்பில் உள்ளதா? என்ற கேள்விகளின் அடிப்படையில் மத்திய அரசு, தமிழ்நாடு அரசுக்கு குறிப்புகள் அனுப்பி உள்ளன’ எனத் தெரிவித்தார்.

நீட் விலக்கு பெறுவதற்கு காலதாமதம் என பார்ப்பதை விட, நிரந்தர விலக்கு கிடைக்க வேண்டும் என்பது தான் தங்களின் நோக்கம் என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும் நீட் விலக்கு மசோதா குறித்து சட்ட ரீதியான பதில்களைத் தயார் செய்து, முதலமைச்சரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவரின் ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு பதில் கடிதம் அனுப்பப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், செயற்கை கருத்தரிப்பு மையங்கள் குறித்து, 38 மாவட்டங்களில் உள்ள சுகாதாரத்துறை அலுவலர்களுடன் நாளை(ஜூலை.21) சுகாதாரத்துறை ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது எனவும், அரசின் வழிமுறைகளை மீறும் மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மீண்டும் எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வெளிநாடுகளில் மருத்துவப்படிப்பு முடித்து, தமிழ்நாட்டில் பயிற்சி பெறும் மருத்துவர்கள் அதிகளவில் உள்ளனர். இதனால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அவர்கள் பயிற்சி பெற 7.5% விழுக்காட்டினை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், அவர்களிடம் இருந்து எவ்விதக் கட்டணமும் வசூலிக்கக்கூடாது என சட்டம் இருந்தபோதிலும் ரூ.5 முதல் 10 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டிற்கு, இதுகுறித்து துறை ரீதியாக சட்ட ரீதியாக அலுவலர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

உக்ரைன் நாட்டில் ஏற்பட்ட போர் காரணமாக மருத்துவப் படிப்பைத் தவறவிட்ட மாணவர்களுக்கு மாற்று இடங்களில் படிப்பைத் தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.