சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள வனத் துறை தலைமை அலுவலகக் கூட்ட அரங்கில், வனத் துறை மேம்பாட்டுப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ராமச்சந்திரன் நேற்று (அக்டோபர் 18) ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளரைச் சந்தித்த அமைச்சர்,"டி23 புலியின் உடல்நலம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.
தொடர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதால் விரைவில் புலியை எங்கு கொண்டுவருவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். தமிழ்நாட்டில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வனத் துறையின் நிலங்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது" என்றார்.
மசினக்குடி, கூடலூர், தேவர்சோலை உள்ளிட்டப் பகுதிகளில் நான்கு மனிதர்கள், 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடிக் கொன்ற புலியைப் பிடிக்க வனத் துறையினர் தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட நாள்களாகத் தேடிவந்தனர்.
இதையடுத்து, இரண்டு மயக்க ஊசிகள் செலுத்துப்பட்ட நிலையில், டி23 புலி கடந்த அக்டோபர் 15ஆம் தேதி வனத் துறையிடம் பிடிப்பட்டது குறிப்பிடத்தக்கது.