சென்னை: சைதாப்பேட்டை மாநகரப் போக்குவரத்துக்கழகப் பணிமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொழிலாளர் ஓய்வு அறையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். அபராதம் இல்லை. அபராதம் விதிக்கப்படுவதில் இருந்துதான் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி முகக்கவசம் அணிவது என்பது ஒவ்வொருவரும் தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்கு செய்யவேண்டிய காரியமாகும். அபராதம் விதித்துதான் தீரவேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் வரக்கூடாது.
கட்டாயம் என்றுகூறி மக்களை வற்புறுத்தி காவல் நிலையத்தில் கைது செய்வோம். அபராதம் விதிப்போம் எனக்கூறிய பிறகுதான் நான் என்னுடைய உயிரைக் காப்பற்றிக்கொள்ள முயற்சிப்பேன் என்று சொல்வது தவறு. முகக்கவசம் என்பது பொதுமக்களுக்கான விஷயம். அவரவர் தங்கள் உயிர் மேல் அக்கறை இருந்தால், ஆசை இருந்தால் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் உலக நியதி.
முகக்கவசம் இப்போது எல்லோரும் அணிந்து கொள்வது அவசியம். வட மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிவது விலக்கிக்கொள்ளப்படவில்லை. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'ஆளுநரைத் தாக்க இது அதிமுக அரசு அல்ல - சட்டப்பேரவையில் ஸ்டாலின்'