ETV Bharat / city

200 வார்டுகளில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரம் - அமைச்சர் ஜெயக்குமார் - அமைச்சர்கள் குழு

சென்னை: கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக 200 வார்டுகளிலும் அந்த வார்டை பற்றி நன்கறிந்த ஒரு உதவிப் பொறியாளர் தலைமையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

team
team
author img

By

Published : Jun 17, 2020, 5:56 PM IST

Updated : Jun 17, 2020, 7:12 PM IST

சென்னையில் அதி தீவிரமாக பரவி வரும் கரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் இன்று (ஜூன் 17) காலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன், உணவுத்துறை அமைச்சர் காமராஜ், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “கரோனா வைரஸ் தடுப்பு பணியில், 200 வார்டுகளில் அந்த வார்டை பற்றி நன்கு தெரிந்த ஒரு உதவிப் பொறியாளரை நியமித்து, அவர் தலைமையில் அனைத்து அலுவலர்களும் பணிபுரிவர். வைரஸை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், மக்கள் முகக் கவசம் அணிவது, தகுந்த இடைவெளி போன்ற விதிமுறைகளை பின்பற்றினால் வைரஸை முழுமையாக அழித்து விடலாம்“ என்றார்.

200 வார்டுகளில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரம் - அமைச்சர் ஜெயக்குமார்

அதைத் தொடர்ந்து பேசிய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கரோனா தொற்று எண்ணிக்கை ஒரு நாள் ஏறும், மறு நாள் இறங்கும் என்றும், ஒரு நாளை வைத்து எதையும் கணிக்க முடியாது என்றார்.

ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசும்போது, ”சென்னையில் தண்ணீர் பிரச்னை எங்கும் இல்லை. அப்படி இருந்தாலும் அந்த இடங்களில் சின்டெக்ஸ் நீர் டேங்குகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மனதை புண்படுத்துகிறது. இந்தச் சூழலிலும் முதலமைச்சர் மற்ற குழுக்களுடன் ஆலோசித்து முழு ஊரடங்கை அறிவித்துள்ளார். எனவே, மக்கள் இந்த ஊரடங்கை பயன்படுத்தி வைரஸ் பரவுவதை தடுக்க உதவி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு ரூ. 9,000 கோடி வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

Last Updated : Jun 17, 2020, 7:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.