சென்னை அண்ணா சாலையில் தனியார் கடையை தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தலைக்கவசம் என்பது மிகவும் முக்கியம். விபத்து ஏற்படும் நேரங்களில் மனிதர்களின் உயிரைக் காக்கும் தலைக்கவசத்தை அனைவரும் அணிய வேண்டும்” என்ற கோரிக்கைவைத்தார்.
தொடர்ந்து அமித் ஷா சந்திப்பில் கூட்டணி குறித்து பேசுவதற்கு வாய்ப்பு உள்ளதா என்று எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர், "அமித் ஷாவின் வருகை அரசுமுறைப் பயணமாகத்தான் உள்ளது. கூட்டணி குறித்து கட்சித் தலைமை முடிவுசெய்யும்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், “தமிழ்நாட்டில் அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கையால் கரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. இந்த நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் நேற்று (நவ. 20) நடத்திய ஊர்வலத்தில் சமூக இடைவெளி, முகக்கவசம் என்று எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றாமல் பேரணி நடத்தப்படுகிறது" எனக் குற்றஞ்சாட்டினார்.
இதுபோன்று செயல்களில் ஈடுபடுவதன் மூலம் தமிழ்நாட்டில் இரண்டாம் அலை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும், பாஜக மட்டும் அல்ல; தமிழ்நாட்டில் யார் அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மண்டல பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர்களுக்கான பணிகள் குறித்து பேசப்பட்டதாகத் தெரிவித்தார்.