ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் இன்று பழைய வண்ணாரப்பேட்டை பகுதிகளில், சைக்கிள் ரிக்ஷாவில் அமர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் இப்பகுதியில் நடந்து சென்றும் குழந்தைகளை தூக்கி கொஞ்சியும் பொதுமக்களிடம் இரட்டை இலைக்கு அவர் வாக்கு சேகரித்தார். அதைத்தொடர்ந்து, வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்ற எம்ஜிஆர் பாடலை பாடியும் அமைச்சர் ஜெயக்குமார் வாக்கு சேகரித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “சிறுபான்மை மக்களின் ஆதரவு அதிமுகவிற்கு அதிகமாக உள்ளது. முதலமைச்சரின் பிஆர்ஓ நான் என ஸ்டாலின் கூறியதற்கு, பெருமைப் படுகிறேன். இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கு திமுக தான் காரணம்” என்றார்.
இதையும் படிங்க: 'அண்ணாத்த'வை சந்தித்த நம்ம அண்ணாச்சி!