ETV Bharat / city

மாணவர்கள் நலனை குழி தோண்டி புதைத்த திமுக - அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை : மாணவர்கள் நலனை குழி தோண்டி புதைத்தவர்கள் திமுகவும் காங்கிரசும்தான் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

jayakumar
jayakumar
author img

By

Published : Sep 14, 2020, 1:58 PM IST

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் மீன் பிடிக்கச் சென்று மாயமான ஒன்பது மீனவர்களின் குடும்பத்தினர், தலைமைச் செயலகத்தில் இன்று (செப்.14) மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கிய அமைச்சர் ஜெயக்குமார், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “மாயமான மீனவர்களைத் தொடர்ந்து தேடிவந்த நிலையில், தற்போது அவர்கள் மியன்மார் நாட்டில் பத்திரமாக இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், அவர்களை பத்திரமாக இங்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் அவர்கள் அனைவரும் தமிழ்நாடு அழைத்து வரப்படுவார்கள்“ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “நீட் விவகாரத்தில் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டக் கூடாது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோதே, திமுக நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? மாணவர்கள் நலனை குழி தோண்டி புதைத்தவர்கள் திமுகவும் காங்கிரசும்தான். சட்டப்பேரவையில் நீட்டிற்கு எதிராகத் தீர்மானம் இயற்றுவது குறித்து அரசு முடிவெடுக்கும். இது குறித்து முதலமைச்சர் பிரதமரை பலமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். மக்களின் உணர்வைப் புரிந்து மத்திய அரசு நீட் தேர்வு குறித்து பரிசீலிக்க வேண்டும் ” என்று கூறினார்.

மாணவர்கள் நலனை குழித்தோண்டி புதைத்த திமுக - அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

இதையும் படிங்க: 'நீட் தேர்வை ரத்து செய்' வாசங்கள் அடங்கிய முகக்கவசத்துடன் சட்டப்பேரவைக்கு வந்த திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.