ETV Bharat / city

‘அமைச்சர் அன்பில் மகேஷுக்கு டெங்கு காய்ச்சல் இல்லை’ - மா.சுப்ரமணியன் - Ma Subramanian

அமைச்சர் அன்பில் மகேஷுக்கு டெங்கு தொற்று இல்லை என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 28, 2022, 3:42 PM IST

சென்னை: ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில், முதுநிலை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்காக பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களின் சான்றிதழ்களும் பரிசீலனை செய்யப்பட்டு, அதற்கான தரவரிசை பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

அப்போது அமைச்சர் பேசுகையில், "முதுநிலை மருத்துவ படிப்பிற்கான அரசு கல்லூரியில் 1162 இடங்களும், நிர்வாக நிலை கல்லூரிகளில் 763 இடங்களும், 31 சுயநிதி கல்லூரிகளில் உள்ள 296 முதுநிலை பல் மருத்துவ இடங்கள் மற்றும் தேசிய வாரிய பட்டப்படிப்பு இடங்கள் 94 என மொத்தம் 2346 இடங்கள் உள்ளன.

இந்த இடங்களானது 23 அரசு கல்லூரிகளிலும் 16 சுயநிதி கல்லூரிகளிலும் இருக்கின்றன. இந்நிலையில், 11,178 முதுநிலை மருத்துவ மேற்படிப்பிற்கான விண்ணப்பங்களை 6968 பேர் விண்ணப்பித்ததில், 6893 விண்ணப்பங்கள் தகுதியான விண்ணப்பங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக 2925-ம் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டது. அதில், 286 விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்தவை. அடுத்ததாக, பல் மருத்துவ படிப்பிற்கு அரசு கல்லூரிகளில் 679 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 662 விண்ணப்பங்கள் தகுதியான விண்ணப்பங்கள் ஆகவும், நிர்வாக ஒதுக்கீட்டில் 341 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 310 விண்ணப்பங்கள் தகுதியானவையாகவும் உள்ளன.

இவை அனைத்திற்கும் ஆன கலந்தாய்வானது இணையதளம் வாயிலாக நடைபெறும். முதல் நாளான நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தய்வு நடைபெறும். மேலும், தமிழ்நாட்டில் பரவி வரும் காய்ச்சல் தொடர்பாக பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “தமிழ்நாட்டில் தினசரி 100பேர் அளவிற்கு ஹச்1 என்1 பாதிக்கப்பட்டனர்.

அது நேற்று 56ஆக குறைந்துள்ளது. 6471 இடங்களில் காய்ச்சல் முகாம்கள்,15900 பள்ளிகளில் வாகனங்கள் மூலம் முகாம்கள் நடத்தப்பட்டு மாணவர்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு ஹெச்1என்1 காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை அவர் வீடு திரும்புவார். அவருக்கு டெங்கு இல்லை" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்திய உணவுக் கழகத்தில் டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.