சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கரூர் காவல்துறையினர் செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020ம் ஆண்டு திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. கரூரில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் கரோனா விதிகளை பின்பற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது கரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தப்பட்டதாகவும், விதிகளை மீறவில்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று (செப்.21) நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது எனக் கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கோயிலில் ஆபாசப்படம் பார்த்த இளைஞர் தப்பியோட்டம்; போலீஸ் வலைவீச்சு