ETV Bharat / city

மயில் சிலை மாயமான விவகாரம்: அறநிலையத்துறை ஆணையர் ஆஜராக உத்தரவு - அறநிலையத்துறை ஆணையர் ஆஜராக உத்தரவு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் அளித்த ஆவணங்கள், விசாரணையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

மயில்
மயில்
author img

By

Published : Jan 27, 2022, 10:26 PM IST

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாயமான விவகாரத்தில் உண்மை கண்டறியும் குழு விசாரணை தாமதமானதன் காரணம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆஜராகி விளக்கமளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோயிலில் 2004ஆம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடந்த போது, புன்னைவனநாதர் சன்னதியில் உள்ள மயில் சிலை மாயமானது.

வழக்குப் பதிவு

இது குறித்துச் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 2018ஆம் ஆண்டு பதிவு செய்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும், அறநிலையத் துறை அலுவலர்களின் தொடர்பு குறித்து துறை ரீதியாக நடத்தப்படும் உண்மை கண்டறியும் விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் குறித்து 2018ஆம் ஆண்டுதான் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இறுதி அறிக்கை எங்கே

மேலும், குடமுழுக்கு நடந்தபோது கோயில் இணை ஆணையராக இருந்த திருமகள், ஸ்தபதி முத்தைய்யா, டிவிஎஸ் நிறுவன உரிமையாளர் வேணு சீனிவாசன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 90 சதவீத முடிவடைந்துள்ளதாகவும், 85 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், மாயமான சிலையைக் கண்டுபிடிக்க முடியாததால் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இயலவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது உண்மை கண்டறியும் விசாரணை நடைபெறவில்லை என ரங்கராஜன் நரசிம்மன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

நீதிமன்றம் உத்தரவு

அதற்கு விளக்கம் அளித்த அறநிலையத் துறை தரப்பு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் விசாரணை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உண்மை கண்டறியும் விசாரணை தாமதமாகக் காரணம் என்ன? பொறுப்பாளர்கள் யார் என்பது குறித்தும், அனைத்து ஆவணங்களுடனும் அறநிலையத்துறை ஆணையர் ஜனவரி 31ஆம் தேதி காணொலி மூலம் ஆஜராக உத்தரவிட்டனர்.

மேலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்கு குறித்த ஆவணங்கள், விசாரணையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: பெண்ணியம் பேசும் 'ஷியாம் சிங்கா ராய்' திரைப்படம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.