ETV Bharat / city

திமுக ஒதுக்கும் இடங்களில் மதிமுக போட்டி - வைகோ

author img

By

Published : Dec 14, 2019, 4:13 PM IST

சென்னை: உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை திமுக ஒதுக்கும் இடங்களில் மதிமுக போட்டியிடுமென அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

mdmk
mdmk

சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ”சுதந்திர இந்தியாவில் அண்மைக்காலமாக அடுக்கடுக்கான அபாயகரமான முடிவுகளை மோடி அரசு எடுத்துவருகிறது. காஷ்மீர் மக்களுக்குத் தந்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு 370ஆவது சட்டப்பிரிவை நீக்கியதால் காஷ்மீர் பற்றி எரிகிறது.

எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து எந்த மத நம்பிக்கையுடையவரும் இங்கு வந்து குடியுரிமைப் பெறலாம், ஆனால் இஸ்லாமியர்களுக்கு அது பொருந்தாது எனக் கூறுவது, மீண்டும் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றதற்குச் சமமாகும்.

இனப்படுகொலை செய்த கோத்தபய ராஜபக்சவுடன் கரம் குலுக்கிக் கொண்டு இருக்கிறார்கள். 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள அரசால் இனப்படுகொலைக்கு ஆளாகிவந்து இங்கே தங்கியுள்ளத் தமிழர்கள் பற்றி எந்தக் கவலையும் இந்த அரசிற்கு இல்லை. இது வருங்காலத்தில் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

பொருளாதாரம் மீட்க முடியாத வீழ்ச்சிக்குச் சென்றுகொண்டிருக்கிறது. மக்கள் கவனத்தை திசை திருப்பினாலும், நாட்டின் மொத்த பொருளாதாரம் பாதிக்கப்பட்டு கோடிக்கணக்கானவர்கள் வேலையிழந்துள்ளனர் என்பதை மறுக்கமுடியாது“ எனக் கூறினார்.

மேலும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கேட்ட கேள்விக்கு, திமுக ஒதுக்கும் இடங்களில் மதிமுக போட்டியிடும் என வைகோ பதிலளித்தார்.

வைகோ, பொதுச்செயலாளர், மதிமுக

இதையும் படிங்க: களைகட்டிய மனுத்தாக்கல்: ஆட்டம் பாட்டத்துடன் வந்த வேட்பாளர்கள்!

Intro:சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேட்டிBody:சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேட்டி

சுதந்திர இந்தியாவில் அன்மை காலமாக அடுக்கு அடுக்கான அபாயகரமான முடிவுகளை மோடியின் அரசு எடுத்து வருகிறது.

காஷ்மீர் மக்களுக்கு தந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு 370வது அரசியலமைப்பு சட்டப்பிரிவை நீக்கியதால் காஷ்மீர் பற்றி எரிகிறது. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம் ஆகிய நாடுகளில் இருந்து எந்த மத நம்பிக்கையுடைவரும் வரலாம். வந்து குடியுரிமை பெறலாம். ஆனால் இஸ்லாமியர்களுக்கு பொருந்தது என்று கூறியது மீண்டும் மகாத்மா காந்தியை சுட்டு கொன்றதுக்கு சமம்.

ரோஹிங்கியா முஸ்லீம்கள் பற்றி கவலைப்படாத அரசு. 35 ஆண்டுகளுக்கு மேலாக சிங்காள அரசால் இனப்படுகொலைக்கு ஆளாகிவந்து தங்கியுள்ளவர்கள் பற்றி எந்த கவலையும் இல்லை. இந்த இனப்படுகொலை செய்த கோத்தபாய ராஜபக்சவுடன் கரம் குலுக்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று நாடாளுமன்றத்தில் கூறினேன். இது வருங்காலத்தில் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

பொருளாதாரம் மீட்க முடியாத வீழ்ச்சிக்கு சென்று கொண்டு இருக்கிறது. இதை மீட்க வழியில்லை. மக்கள் கவனத்தை திருப்புகின்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுப்பட்டாலும் நாட்டின் மொத்த பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால் கோடிக்கணக்கானவர்க்ள் வேலை இழந்து உள்ளனர்.

திமுக ஒதுக்கும் இடங்களில் மதிமுக போட்டியிடும்.

கொலைக்காரன் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோருடன் கூடி விருந்து சாப்பிட்டு வந்தது தான் வெளியுறவு மந்திரியின் கடமை. அந்த கடமையை செய்து உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.