முன்னாள் குடியரசுத் தலைவரும், அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இவரது படத்திற்கு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, தனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாம் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அப்துல் கலாம் ஒரு அறிவியல் மாமேதை என்றும், அவர் தன் மீது அதீத அன்பு வைத்திருந்தவர் எனவும் கூறினார்.
அதேபோல், அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்டதில் தனது பங்கு என்ன என்பதை சுட்டிக்காட்டிய வைகோ, அதையெல்லாம் தான் என்றும் தம்பட்டம் அடித்துக்கொண்டதில்லை எனவும் தெரிவித்தார்.