தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடத்தில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. கடந்த மே 7ஆம் தேதி ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் வெற்றிபெற்ற மற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். கரோனா தொற்று காரணமாக ஒட்டப்பிடாரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி. சண்முகையா பதவி ஏற்கவில்லை.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில்
சபாநாயகர் அப்பாவு கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த எம்.சி. சண்முகையாவிற்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
வருகின்ற 21ஆம் தேதி சட்டப்பேரவைக் கூடவுள்ள நிலையில் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: சுஷில் ஹரி பள்ளியின் ஆங்கில ஆசிரியை முன் ஜாமின் கோரி மனு!