ETV Bharat / city

மருத்துவப் படிப்பு: பொதுப்பிரிவு கலந்தாய்வு தேதி அறிவிப்பு

author img

By

Published : Nov 20, 2020, 4:53 PM IST

Updated : Nov 20, 2020, 6:23 PM IST

mbbs_bds_general_counselling
mbbs_bds_general_counselling

16:50 November 20

பொதுப்பிரிவு கலந்தாய்வு தேதி அறிவிப்பு

சென்னை: மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் பொதுப்பிரிவு கலந்தாய்வு நவம்பர் 23ஆம் தேதி முதல் டிசம்சர் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்கு கட்ஆப் மதிப்பெண் 495 வரை பெற்ற 5441 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு நவம்பர் 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு 18ஆம் தேதி முதல் இன்று (நவம்பர் 20) வரை நடைபெற்றது. அதில், பல் மருத்துவப் படிப்பில் ஆறு இடங்கள் காலியாக உள்ளன. 

பொதுப் பிரிவு கலந்தாய்வில் எம்பிபிஎஸ் படிப்பில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2805 இடங்களும், 15 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 1061 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 153 இடங்களும், 18 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 985 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. 

இந்நிலையில், மருத்துவக் கல்வி மாணவர்கள் சேர்க்கை குழு செயலாளர் செல்வராஜன் வெளியிட்டுள்ள அட்டவணையில், "எம்பிபிஎஸ், பிடிஎஸ், மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரி, அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், ராஜாமுத்தையா மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி, கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். இந்த கலந்தாய்வு காலை 9 மணி, 11 மணி, மதியம் 2 மணி என 3 பிரிவாக நடத்தப்படும். 

தரவரிசைப் பட்டியில் ஒன்று முதல் 361 வரை பெற்றவர்கள் நவம்பர் 23ஆம் தேதியும், 362 முதல் 751 வரை இடம் பெற்ற மாணவர்களுக்கு நவம்பர் 24ஆம் தேதியும், 752 முதல் 1203 வரை இடம் பெற்றவர்களுக்கு 25ஆம் தேதியும், 1204 முதல் 1701 வரை பெற்றவர்களுக்கு 26ஆம் தேதியும், 1702 முதல் 2150 வரை இடம் பெற்ற மாணவர்களுக்கு 27ஆம் தேதியும், 2151 முதல் 2622 வரை பெற்றவர்கள் நவம்பர் 28ஆம் தேதி கட்ஆப் மதிப்பெண் 551 வரையில் அழைக்கப்பட்டுள்ளனர். 29ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

நவம்பர் 30ஆம் தேதி 2623 முதல் 3151 வரையில் பெற்றவர்களும், டிசம்பர் 1ஆம் தேதி 3152 முதல் 3707 வரையில் பெற்றவர்களும், 2ஆம் தேதி 3708 முதல் 4301 வரையில் பெற்றவர்களும், 3ஆம் தேதி 4302 முதல் 4890 வரையில் பெற்ற மாணவர்களும், 4ஆம் தேதி 4891 முதல் 5441 வரையில் கட்ஆப் மதிப்பெண்கள் 495 வரையில் பெற்ற மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. 

மாணவர்கள் தங்களுக்கான அழைப்பு கடிதத்தை www.tnmedicalselection.org, www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். யாருக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்படாது. கலந்தாய்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக மாணவர்கள் வர வேண்டும். கலந்தாய்வின் போது உண்மையான சான்றிதழ் இல்லையென்றால் அனுமதிக்கப்படமாட்டார்கள். 

நீட் தேர்வு 2020 ஹால் டிக்கெட் மற்றும் மதிப்பெண் சான்றிதழ், 10, 11, 12 ஆகிய வகுப்புகளின் மதிப்பெண் சான்றிதழ், 6 முதல் முதல் 12ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளியில் படித்ததற்கான மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் பெற்ற சான்றிதழ், இறுதியாக படித்த பள்ளியின் மாற்று சான்றிதழ் அல்லது தற்போது படிக்கும் கல்வி நிறுவனத்தின் உண்மை சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்றவற்றை கொண்டு வர வேண்டும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Last Updated : Nov 20, 2020, 6:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.