ETV Bharat / city

பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமன ஒப்புதல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளிநடப்பு

சென்னை பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சென்னையில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனம்

author img

By

Published : Jul 30, 2022, 7:12 PM IST

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் கட்டட வளாகத்தில் மேயர் பிரியா தலைமையில் இன்று (ஜூலை.30) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தம் 98 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சென்னை பள்ளிகளில் தற்காலிக கணினி உதவியாளர்கள், கணினி ஆசிரியர்கள், இளநிலை உதவியாளர்கள், பாதுகாவலர்கள், மழலையர் பிரிவில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆயாக்கள் நியமிப்பது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நான்காவது வார்டு உறுப்பினர் ஜெயராமன் கூறுகையில், "மாநகராட்சி பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர், கணினி ஆசிரியர் உள்ளிட்டோரை தலைமை ஆசிரியர்கள் நேரடியாக நியமிக்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளோம். தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை நேரடியாக நியமிப்பதில் சில அரசியல் விளையாட்டு இருக்கக்கூடும்.

அரசு பள்ளியின் தரத்தை உயர்த்த இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்றால் தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை காலியான இருக்கும் இடத்திற்கு நியமிக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியின்போது இதே போன்றே ஆசிரியர்களை நேரடியாக நியமிக்கப்பட்டார்கள். இதெல்லாம் நடக்கக் கூடாது என்று தான் திமுக கூட்டணிக்கு வாக்களிக்கப்பட்டது. ஆனால் தற்போதும் இது நடைபெறுவது நல்லதல்ல.

ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக ஒரே சம்பளம் பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு தகுதிக்கேற்ப சம்பளம் வழங்க வேண்டும். மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடைபெறவில்லை. மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதை விரைவில் முடிக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் நடைபெறும் பணிகளின் தரவுகளை அதிகாரிகள் சரியாக மக்கள் பிரதிநிதிக்கு வழங்குவதில்லை. அது முறையாக வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கம்- தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் தரப்பு கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.