ETV Bharat / city

சீதாராம் யெச்சூரியை விடுதலை செய்ய வேண்டும்- மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா ஆகியோரை கைது செய்ததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Aug 10, 2019, 6:39 AM IST

ஆகஸ்ட் 5ஆம் தேதி காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் நீக்கப்பட்டது. இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா ஆகியோர் காஷ்மீர் மக்களைச் சந்திக்க விமான நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

ஆனால், இருவரையும் காஷ்மீர் செல்லவிடாமல் விமான நிலையத்திலே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து அவர்கள் இருவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைத்துள்ள தலைவர்களையும், விடுதலை செய்ய வேண்டும் எனவும், சிறப்பு அந்தஸ்தை நீக்கியதைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இதில், மற்றொரு நிகழ்வாகத் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் சீதாராம் யெச்சூரி கைதை கண்டித்தும் சிறப்பு அந்தஸ்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர்.

Intro:காஷ்மீரில் சீதாராம் எச்சூரி மற்றும் டி ராஜா ஆகியோரை கைது செய்ததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவண்ணாமலை நகராட்சி பூங்கா அருகே 30க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Body:காஷ்மீரில் சீதாராம் எச்சூரி மற்றும் டி ராஜா ஆகியோரை கைது செய்ததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவண்ணாமலை நகராட்சி அறிவொளி பூங்கா அருகே 30க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காஷ்மீர் மக்களை சந்திக்க சென்ற சீதாராம் எச்சூரி மற்றும் டி ராஜா ஆகியோரை காஷ்மீர் மக்களை சந்திக்க விடாமல் விமான நிலையத்திலேயே கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையை கண்டித்து திருவண்ணாமலை நகராட்சி அறிவொளி பூங்கா அருகில் 30க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, வீட்டுக் காவலில் கைது செய்து வைக்கப்பட்டுள்ள ஒமர் அப்துல்லாஃ மெகபூபா முப்தி மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோரை விடுவிக்க வேண்டும்.

கைது செய்யப்பட்டுள்ள சீதாராம் எச்சூரி மற்றபடி ராஜா அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

காஷ்மீர் மக்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர்களின் ஆதரவு எப்போதும் உண்டு.

ஹிந்து முஸ்லிம் என இன வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் இருக்கின்ற இந்திய தேசத்தில், கலவர பூமியாக மாற்றுகின்ற பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த மதவெறி பிடித்த மோடி அரசு 90 ஆயிரம் ராணுவ வீரர்களை காஷ்மீருக்குள் அனுப்பி எதிர்க்கட்சி தலைவர்களை எல்லாம் வீட்டுக்காவலில் வைத்து காஷ்மீரின் சிறப்பு சட்டங்கள் 370 மற்றும் 35a ஆகியவற்றை நீக்கி உள்ளது.

இந்த சூழலில் காஷ்மீர் மக்கள் வெகுண்டு எழுந்து உள்ளனர். அவர்களை சந்திக்கச் சென்ற சீதாராம் எச்சூரி மற்றும் டி ராஜா அவர்களை ஒரு தலைப்பட்சமாக கைது செய்துள்ளனர்.

மேலும் ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை காஷ்மீர் மக்களுக்கு எதிராக நீக்கியுள்ளனர். இந்த நீக்கத்தை வாபஸ் வாங்கும் வரை ஒரு தார்மீக ஆதரவை காஷ்மீர் மக்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இடதுசாரிகள் வழங்குவார்கள் என்று மாநில குழு உறுப்பினர் பாண்டி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Conclusion:காஷ்மீரில் சீதாராம் எச்சூரி மற்றும் டி ராஜா ஆகியோரை கைது செய்ததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவண்ணாமலை நகராட்சி பூங்கா அருகே 30க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.