ETV Bharat / city

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

author img

By

Published : Jul 26, 2021, 10:57 AM IST

Updated : Jul 26, 2021, 11:44 AM IST

சென்னை மெரினா கடற்கரைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வெடிகுண்ட மிரட்டல் விடுத்தவர் கைது
வெடிகுண்ட மிரட்டல் விடுத்தவர் கைது

சென்னை : காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று செல்போனில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மெரினா கடற்கரையில் குதிரைக்கு கீழே படுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். 8220855018 என்ற இந்த எண்ணிற்கு 100ஆவது முறை யார் தொடர்பு கொண்டாலும் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்தார்.

இது தொடர்பாக தகவல் அறிந்து மெரினா போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் இணைந்து கடற்கரையில் சோதனை நடத்தினர். அது புரளி என்பது தெரிய வந்தது. இதையடுத்து மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்து சைபர் பிரிவு போலீசாரின் உதவியோடு ஆய்வு செய்யப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கோவையில் இருந்து பேசியிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மெரினா போலீசார் கோவைக்கு விரைந்தனர்.

பின்னர் செல்போன் எண் மூலம் கோவை குனியமுத்தூரை சேர்ந்த பீர் முகம்மது(41) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பீர் முகமது ஏற்கெனவே மூன்று முறை செல்போன் மூலம் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : கரோனா - ஒரே நாளில் 416 பேர் உயிரிழப்பு

Last Updated : Jul 26, 2021, 11:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.