லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் விக்ரம். இப்படம் தற்போது வரை மிக பெரிய வசூலை குவித்து வருகிறது. அனிருத் இசையில் பாடல்களும் வெற்றி பெற்றன. லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் கிளாசிக் பழைய பாடல்களை பயன்படுத்துவது வழக்கம்.
இப்படத்திலும் சக்கு சக்கு வத்திக்குச்சி என்ற பாடலை பயன்படுத்தி இருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இது 1995-இல் வெளியான அசுரன் என்ற படத்தில் இடம்பெற்றதாகும். இப்பாடலில் மன்சூர் அலிகான் மிகப பிரமாதமாக நடனம் ஆடியிருப்பார்.
தற்போது விக்ரம் படத்தில் இந்த பாடல் இடம்பெற்றதை அடுத்து மீண்டும் இப்பாடல் சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. இதனையடுத்து மன்சூர் அலிகான் இப்பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது அதுவும் டிரண்டாகி வருகிறது.
இதையும் படிங்க: 'கழகத் தலைவன்' ஆகிறாரா உதயநிதி..?