சென்னை: சர்வதேச விமான நிலையத்திற்கு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் அடிஸ் அபாபா நகரில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது தாண்சானியா நாட்டைச்சேர்ந்த ஜோசப் பேட்டரிக் (37) என்ற பயணி சுற்றுலாப் பயணிகள் விசாவில் உகாண்டாவில் இருந்து இந்த விமானத்தில் சென்னை வந்திருந்தார். அந்த தாண்சானியா நாட்டு பயணி ஜோசப் பேட்ரிக் மீது சுங்கு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
இதையடுத்து அவருடைய உடமைகளை முழுமையாக சோதனை செய்தனர். உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல் அந்தப் பயணியை சென்னை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்தனர். அப்போது அவருடைய வயிற்றுக்குள் கேப்சுல்கள் பல விழுங்கி வந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக ஜோசப் பேட்ரிக்கை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு இனிமா கொடுத்து, வயிற்றில் உள்ள கேப்சுல்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றினர். அவருடைய வயிற்றிலிருந்து மொத்தம் 86 கேப்சுல்கள் வெளியே வந்தன.
அவர் விழுங்கி வந்திருந்த கேப்சுல்களை சுங்க அதிகாரிகள் உடைத்து பார்த்தபோது அவைகளில் ஹெராயின் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தை கண்டுபிடித்தனர். 86 கேப்சுல்களிலும் மொத்தம் 1.256 கிலோ ஹெராயின் போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 8.86 கோடி.
இதையடுத்து சுங்க அதிகாரிகள் உகாண்டா பயணியை கைது செய்தனர். அவரிடமிருந்த ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனா். அவரை மேலும் தொடர்ந்து நடத்த்தப்பட்ட விசாரணையில் இவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
இவரிடம் இந்த போதை பொருளை கொடுத்து அனுப்பியது யாா்?, சென்னையில் யாரிடம் கொடுக்க எடுத்து வந்தாா்? என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் யார் இருக்கிறார்கள் என்றும் விசாரிக்கின்றனா்.
இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் சமத்துவ மயானங்கள் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும்