ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த ராஜா மோகன்(35). இவர் மீது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய மனைவி,நெல்லூர் மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை செய்ததாக புகார் கொடுத்தார். இதை அடுத்து நெல்லூர் மகளிர் காவல்துறையினர், ராஜா மோகன் மீது வரதட்சணை கொடுமை பிரிவில் வழக்குப் பதிவு விசாரணை நடத்த தேடினர்.
ஆனால் இவர் காவல்துறையினரிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து நெல்லூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கடந்த 2021 ஆம் ஆண்டு, ராஜா மோகனை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசி போட்டு வைத்திருந்தார். இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.
அந்த விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அதே விமானத்தில் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, ராஜா மோகனும் வந்துள்ளார்.
பின்னர் குடியுரிமை அதிகாரிகள் ராஜா மோகனுடைய பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது இவர் ஆந்திரா காவல்துறையினரால் வரதட்சணை கொடுமை வழக்கில் இரண்டு ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரிய வந்தது.
இதை அடுத்து ராஜா மோகனை வெளியில் விடாமல் ஒரு தனி அறையில் அடைத்து வைத்தனர். அதோடு நல்லூர் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து நெல்லூர் மகளிர் காவல் தனிப்படையினர் ராஜா மோகனை கைது செய்து அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க: சுகேஷ் சந்திரசேகர் பணமோசடி வழக்கு... நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் 2ஆவது விசாரணைக்கு ஆஜர்...