ETV Bharat / city

'105 சவரன் நகை, டொயோட்டோ கார் வரதட்சணை' -  ஐஐடியில் பேராசிரியர் பணி எனக்கூறி டாக்டரை  மணந்த நபர் அதிரடி கைது!

ஐஐடியில் பேராசிரியராகப் பணிபுரிவதாகக் கூறி ஏமாற்றி, டாக்டரை இரண்டாவதாக மணந்த நபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் வரதட்சணையாக பெற்ற 105 சவரன் நகைகளை அவர் திருடி விற்றது அம்பலமாகியுள்ளது..

15842140ஐஐடி யில்  பணிபுரிவதாக கூறி, டாக்டரை இரண்டாவதாக மணந்த நபர் கைது
ஐஐடி யில் பணிபுரிவதாக கூறி, டாக்டரை இரண்டாவதாக மணந்த நபர் கைது
author img

By

Published : Jul 16, 2022, 8:07 PM IST

சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினர் மும்பையில் வசித்து வந்துள்ளனர். உறவினர்கள் மூலம் வரன் பார்த்து கடந்த 2020ஆம் ஆண்டு பிரபாகரன் என்ற நபருடன் தேவகோட்டையில் வைத்து இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது.

மணமகன் பிரபாகரன் ஐஐடியில் ஆராய்ச்சி படிப்பை முடித்துவிட்டு, அதே ஐஐடியில் வேதியியல் துறை பேராசிரியராகப் பணிபுரிந்து வருவதாக, அவரும் அவரது குடும்பத்தினரும் கூறியுள்ளனர். அதற்கான சான்றிதழும் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அடுக்கடுக்காக பெறப்பட்ட வரதட்சணை: திருமணத்திற்கு முன்பு நிச்சயம் முடிந்தவுடன் மணமகள் வீட்டில் வரதட்சணையாக 105 சவரன் நகைகள், டொயோட்டா கார், மணமகனுக்கு 6 சவரன் செயின், மோதிரம், ஐந்து லட்சம் ரொக்கம், 5 லட்சம் மதிப்புடைய கட்டில் உட்பட ஏராளமான பொருட்களை வரதட்சணையாக வாங்கிக்கொண்டதோடு சென்னையில் சொந்தமாக ஒரு வீடு வாங்கித்தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் திருமணம் நடந்துள்ளது.

திருமணம் முடிந்து ஜாபர்கான்பேட்டை பகுதியில் பிரபாகரனுடன் வசித்து வந்த பெண் மருத்துவர், தனது கணவரின் நடவடிக்கையில் அவ்வப்போது சந்தேகம் எழுந்து அவரிடம் விசாரித்து வந்ததால், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் பிரபாகரன் அவரை அடித்து துன்புறுத்துவார் எனக் கூறப்படுகிறது.

ஒரு நாள் வீட்டில் கட்டிலின் கீழே இருந்த நகைகளை எல்லாம் காணவில்லை என்று பிரபாகரனிடம் பெண் மருத்துவர் கேட்டபோதுதான், பெண் மருத்துவரிடம் வரதட்சணையாக பெற்ற சுமார் 105 சவரன் தங்க நகைகளைக்கொண்டு சென்று அடகு வைத்து, தனது குடும்பத்தினர் நடத்தி வரும், டிஃபன் கடையை பெரிய ஹோட்டலாக மாற்றியது தெரியவந்தது. இதைத் தட்டி கேட்டதால் பெண் மருத்துவரை கத்தியால் தாக்கி, கொடுங்காயத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இ-மெயிலால் மாட்டிய புதுமாப்பிள்ளை: மகளின் வாழ்க்கை வீணாகி விடக்கூடாது எனக்கருதி பெண் மருத்துவரின் பெற்றோரும் பொறுத்துக்கொள்ள, ஒரு கட்டத்தில் பிரபாகரனின் லேப்டாப்பில் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த ஈமெயில் இருப்பதைப் பார்த்து பெண் மருத்துவர் சந்தேகம் அடைந்துள்ளார். அவரது சகோதரருடன் சேர்ந்து அந்தப்பெண் குறித்த விவரங்களைத் தேடியுள்ளார்.

அந்த பெண் சென்னை அண்ணா பல்கலையில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டதாக தெரிய வந்ததால், அவருடன் பயின்ற பெண்ணை அணுகி விசாரித்த போது, அந்தப் பெண்ணிற்கும் பெண் மருத்துவரின் கணவரான பிரபாகரனுக்கும், கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்து அவர்கள் வேளச்சேரியில் தனியாக வசித்து வருவதும் தெரிந்து அதிர்ந்தனர்.

இதற்கும் மேலாக பிரபாகரனுக்கும் அந்தப் பெண்ணிற்கும் ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால், பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் சென்னை ஐஐடிக்கு சென்று பெண் மருத்துவரின் குடும்பத்தினர் விசாரித்தபோது, ஐஐடியில் ஆராய்ச்சிப் படிப்புக்காக விண்ணப்பித்து பதிவு செய்துவிட்டு, அதன்பிறகு அவர் வகுப்புக்கும் வரவில்லை, அவர் பேராசிரியர் என்பதெல்லாம் சுத்த பொய் எனத் தெரிவித்துள்ளனர்.

போலி சான்றிதழ்
போலிச் சான்றிதழ்

ஐஐடி பேராசிரியர் எனக் கூறிவிட்டு வரதட்சணையாக வாங்கிய காரை வீட்டில் இருந்து எடுத்துக் கொண்டு டிஃபன் கடைக்குச்சென்று தினமும் வேலை பார்த்து வந்துள்ளார். இதனை அறிந்த பெண் மருத்துவரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

பெண் மருத்துவரின் திருமண புடவை உட்பட வீட்டிலிருந்த பட்டுப்புடவைகள், வெள்ளிப்பொருட்கள் என பலவற்றையும் வீட்டில் இருந்து திருடிச்சென்று முதல் மனைவியின் வீட்டில் கொடுத்துள்ளார். இது மட்டுமின்றி மகனுக்கு ஏற்கெனவே திருமணம் ஆனதை மறைத்து மற்றொரு திருமணம் செய்து வைத்ததோடு, அந்த திருமணம் மூலம் கிடைத்த வரதட்சணை, நகை, பணத்தை வைத்து ஹோட்டல் தொழிலை விருத்தி செய்ததும், சொந்த ஊரான ராமநாதபுரத்தில் அந்தப் பணத்தை வைத்து வீட்டை புனரமைப்பு செய்ததும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அசோக் நகர் மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் ஐஐடி போலிப் பேராசிரியரான பிரபாகரன், அவரது தந்தை விஸ்வநாதன், தாய் மஞ்சன்னை, சகோதரர் கண்ணதாசன், சகோதரரின் மனைவி வனிதா, மற்றொரு சகோதரர் நெப்போலியன் ஆகிய ஒட்டுமொத்த குடும்பத்தினர் மீதும் அசோக் நகர் மகளிர் காவல்துறையினர் மோசடி, வரதட்சணை கொடுமை, நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிரபாகரனை கைது செய்துள்ள காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவான பிரபாகரனின் குடும்பத்தினரையும் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: காரில் 7 லட்சம் மதிப்புள்ள செம்மரங்கள் கடத்தல்; மடக்கிப்பிடித்த போலீசார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.