ETV Bharat / city

மெரினா தள்ளுவண்டி வழங்கும் டெண்டரில் முறைகேடு! அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு!

சென்னை: ரூ.17.2 கோடிக்கு மெரினாவில் 900 தள்ளுவண்டி வழங்குவதற்கான டெண்டரை அதிமுக இளைஞரணி துணை செயலாளருக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சட்ட விரோதமாக நிர்ணயம் செய்ததை ஆதாரங்களோடு அறப்போர் இயக்கம் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அளித்துள்ளது.

iyakkam
iyakkam
author img

By

Published : Feb 5, 2021, 5:22 PM IST

இது குறித்து அறப்போர் இயக்க நிர்வாகிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அதன் ஒருங்கிணைப்பாளார் ஜெயராம் வெங்கடேசன், “இந்த டெண்டரை தள்ளு வண்டி வர்த்தகத்திற்கு சம்பந்தமே இல்லாத, துணி வியாபாரம் செய்யும் அதிமுக இளைஞரணி துணைச் செயலாளர் அபிஷேக் ரெங்கசாமியின் ’A QUAD ENTERPRISES’ என்ற நிறுவனத்திற்கு தர, முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டு பல விதி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

’நேரடி அனுபவத்திற்கு பதில் உற்பத்தி செய்யும் அனுபவம் இருந்தால் போதும், ஒப்பந்ததாரரிடம் நிதி உள்ளதா என்னும் சான்று வங்கிகளுக்கு பதில் தனியார் நிதி நிறுவனங்கள் கூட வழங்கலாம்’ போன்று பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், டெண்டர் தொகையில் வர்த்தகத்தில் 100 விழுக்காடுக்கு பதில், இந்நிறுவனத்திற்கு ஏற்றார் போல் 50 விழுக்காடு என மாற்ற முற்பட்டு, அதற்கு பதிலாக டெண்டர் தொகைக்கு மேல் 50 விழுக்காடு என்று மாற்றி விடுகிறார்கள்.

நவம்பர் 19, 2020 அன்று டெண்டர் திறந்த பிறகு இதை உணர்ந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள், வேறுவழியின்றி ’A QUAD ENTERPRISES’ நிறுவனம் உள்பட போட்டி போட்ட மூன்று ஒப்பந்ததாரர்களுக்கும் தகுதி இல்லை என்று அறிக்கை வெளியிடுகிறார்கள். பிறகு புது டெண்டர் போடுவதற்கு பதில், சட்ட விரோதமாக, டெண்டர் திறந்து நான்கு நாட்கள் கழித்து நவம்பர் 23 அன்று, டெண்டர் விதிகளில் மாற்றம் செய்கின்றனர்.

வர்த்தக டெண்டர் தொகையில் 50% இருந்தால் போதும் என்று மாற்றி சட்டத்திற்கு மாற்றாக டெண்டரை மீண்டும் திறக்கலாம் என்று ஒரு புது விதியை டெண்டரில் சேர்த்து, அடுத்த ஆறு மணி நேரத்திற்குள் டெண்டரை மீண்டும் திறந்துள்ளனர். ’A QUAD ENTERPRISES’ மட்டும் தகுதியுடைய நிறுவனமாக அறிவிக்கப்பட்டு டெண்டர் தொகையைவிட 73 லட்சம் அதிகமாக, ரூபாய் 17.2 கோடிக்கு மெரினா கடற்கரையில் 900 தள்ளுவண்டி வழங்குவதற்கான டெண்டரை அவர்களுக்கு வழங்கியுள்ளனர்.

இந்த நிறுவனம் மாநகராட்சியில் சமர்ப்பித்த அனுபவ சான்றிதழ், தனியார் நிறுவனம் இவர்களுக்கு நிதி உள்ளதாக கொடுத்த சான்றிதழ் போன்றவை பொய்யானவை என்பதும் தெரியவந்துள்ளது. மீண்டும் மீண்டும் இ-டெண்டர் என்று பொய் சொல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.

இது தொடர்பான அனைத்து ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இன்று அறப்போர் இயக்கம் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு காரணமான மாநகராட்சி தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன், கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமார், அதிமுக இளைஞரணி துணைச் செயலாளர் அபிஷேக் ரெங்கசாமி மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் தேர்தல் சட்டமீறல்கள் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவும் கோரியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கப் பணி - அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.