தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் நீதிமன்றங்களும் காணொலி காட்சி மூலமாகவே வழக்குகளை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், சென்னைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் மதுரையில் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் காரணத்தால், ஜூன் 24 முதல் 30 வரை மதுரை மாவட்டத்திற்கு முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களை திறக்க அனுமதித்த உத்தரவை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 23 முதல் ஜூன் 30 வரை கீழமை நீதிமன்றங்கள் செயல்படாது என்ற அறிவிப்பை சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ளார்
மதுரை மாவட்ட நீதிமன்றங்களை திறக்கக் கூடாது - உயர் நீதிமன்றம் - சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு
சென்னை: மதுரையில் தீவிர ஊரடங்கு அமல்படுத்த இருப்பதால், ஜூன் 24 முதல் ஜூன் 30 வரை மாவட்ட நீதிமன்றங்களை திறக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.