ETV Bharat / city

குடியுரிமை மசோதா நகலை தீயிட்டுக் கொளுத்திய மாணவர்கள் - மாணவர்கள் போராட்டம்

சென்னை: சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் குடியுரிமை திருத்த மசோதா நகலை இந்திய மாணவர் சங்கத்தினர் தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

students
students
author img

By

Published : Dec 11, 2019, 4:43 PM IST

மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதற்கு வடகிழக்கு மாநிலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், குடியுரிமை மசோதாவை கொண்டுவந்த மத்திய அரசைக் கண்டித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில், இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மாணவர்கள் குடியுரிமை சட்டமசோதா நகலை தீயிட்டு எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பின்னர், காவல் துறையினர் தண்ணீர் ஊற்றி அதனை அணைத்தனர்.

இது குறித்து, இந்திய மாணவர் சங்கப் பொதுச்செயலாளர் மாரியப்பன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ”மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசான நம் நாட்டில், மதத்தின் பெயரால் குடியுரிமை கொடுப்பது என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மேற்குவங்கம் ஆகிய நாடுகளிலிருந்து வரக்கூடிய இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க சட்டத்திருத்தம் கொண்டுவந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். இலங்கையிலிருந்து அகதிகளாக ஒரு லட்சம் தமிழர்கள் வந்திருக்கிறார்கள்.

ஆனால், அவர்களையும் இந்த வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு மறுக்கிறது. மாநில அரசிற்கு தமிழர்களின் நலன்களின் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் உடனடியாக இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் இந்தப் போராட்டம் மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும்.

இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

இந்தக் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அஸ்ஸாமில் மாணவர்கள் மிகப்பெரிய முழு அடைப்பு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர். வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் போராட்டம் பரவிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு இதில் பின்வாங்காவிட்டால் நாடு முழுவதும் இப்போரட்டம் விரிவடையும்“ எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'இலங்கைத் தமிழர்களை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை' - அரசியல் விமர்சகர் மார்க்ஸ் சாடல்!

Intro:சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில்
குடியுரிமை திருத்த சட்ட மசோதா நகல் எரிப்பு

Body:சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில்
குடியுரிமை திருத்த சட்ட மசோதா நகல் எரிப்பு

சென்னை,

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் குடியரசு உரிமை திருத்த சட்ட மசோதா நகலை இந்திய மாணவர் சங்கத்தினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியரசு உரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் திடீரென குடியுரிமை சட்ட மசோதா நகலை எரித்தனர். அப்போது சென்னை பல்கலைகழகம் காவல்துறை அதிகாரிகள் தண்ணீர் ஊற்றி அதனை அணைத்தனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் எந்தவித செயலில் ஈடுபட்டாலும் பல்கலைக்கழகத்தின் புகார் இன்றி காவல்துறையினரால் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார். ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் குடியுரிமை சட்ட மசோதா எரிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மாணவர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு நாட்டில் மதத்தின் பேரால் குடியுரிமை கொடுப்பது என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம் .
ஆகவேதான் நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கம் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக பக்கத்தில் இருக்கக்கூடிய ஆப்கானிஸ்தான் ,பாகிஸ்தான் மற்றும் அண்டை நாடுகளான இலங்கை, மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து வரக்கூடியவர்களுக்கே இந்தியாவில் குடியுரிமை கிடையாது.
ஆனால் மற்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய இந்துக்கள் , வைணவர்கள் உள்ளிட்ட மற்றவர்களுக்கு அனுமதி உண்டு. முஸ்லிம்களுக்கு இடமில்லை என்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்தியாவில் இலங்கையிலிருந்து அகதிகளாக ஒரு லட்சம் பேர் வந்திருக்கிறார்கள் .
தமிழ்நாட்டினுடைய முதலமைச்சரும், அதிமுக அரசாங்கமும் தமிழர்களின் நலன்களின் மீது அக்கறை உள்ள அரசாங்கமாக இருந்தால் உடனடியாக இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் இந்தியா முழுவதும் போராட்டம் என்பது இந்திய மாணவர் சங்கம் இன்றைய தினம் தமிழ் நாட்டில் தொடங்கி இருக்கிறோம் .
அஸ்ஸாமில் மாணவர்கள் மிகப்பெரிய முழு அடைப்பு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் நடைபெறும் என கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.