ETV Bharat / city

தக்காளி விலை குறையவில்லையே! - நீதிமன்றம் கவலை - கோயம்பேடு மார்க்கெட்டில்

கோயம்பேடு சந்தையில் தக்காளி லாரிகளை நிறுத்த இடமளித்தும் பெருமளவில் விலை குறையவில்லை எனச் சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

சந்தையில் ஏன் தக்காளி விலை குறையவில்லை
சந்தையில் ஏன் தக்காளி விலை குறையவில்லை
author img

By

Published : Dec 16, 2021, 6:41 AM IST

சென்னை: நவம்பர் மாத இறுதியில் தக்காளி விலை உச்சம் அடைந்துள்ளதால், கோயம்பேடு சந்தையில் மூடிக்கிடக்கும் தக்காளி கிரவுண்டை திறக்க வேண்டும் என்று தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அதில், தக்காளி கிரவுண்டை திறப்பதன் மூலம் வெளி மாநிலங்களிலிருந்து தக்காளிகளை லாரியில் கொண்டுவந்து இறக்கி, குறைந்த விலையில் மக்களுக்குத் தக்காளியை விற்பனை செய்ய முடியும் என்று கூறியது.

தக்காளி விலை குறையும் வரை

இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "தக்காளி விலை குறையும்வரை பொதுநலன் கருதி கோயம்பேடு சந்தையில் தக்காளிகளைக் கொண்டுவந்து இறக்குவதற்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்று மார்க்கெட் கமிட்டி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு உத்தரவிட்டு, இடத்தின் பயன்பாடு குறித்து அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டிருந்தார்.

கோயம்பேடு சந்தை
கோயம்பேடு சந்தை

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று (டிசம்பர் 15) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட அறிக்கையில் நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கவில்லை என்றும், 50.1 சென்ட் நிலம் மட்டுமே ஒதுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தக்காளி விற்பனை செய்யக் கூடாது

மேலும், மார்கெட் கமிட்டி தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட அறிக்கையில், 94 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், கடைகளுக்கு அருகில் வாகன நிறுத்த வசதி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தக்காளி இறக்கும் இடத்தில் விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கைவைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இரு அறிக்கைகளையும் ஆய்வுசெய்த நீதிபதி, ஒதுக்கப்பட்ட இடத்தில் தக்காளி இறக்குவதைத் தவிர, வேறு எந்தப் பணியும் நடைபெறவில்லை என்பதை வியாபாரிகள் உறுதிசெய்ய வேண்டுமென்றும், அப்படி நடந்தால் அதற்கு மனுதாரர் பொறுப்பேற்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

விலை ஏன் பெருமளவில் குறையவில்லை

மேலும், லாரிகளில் வரும் தக்காளியை இறக்கி ஏற்றுவதற்கான இடம் டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையிலும், தக்காளி விலை ஏன் பெருமளவில் குறையவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

வியாபாரிகள் சங்கம் தரப்பில் தென் மாநிலங்களில் கன மழை காரணமாக விளைச்சல் இல்லை என்றும், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலிருந்தும் வரத்துக் குறைவாகத்தான் உள்ளாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லாவிட்டாலும் தக்காளி விலை ஓரளவு குறைந்துள்ளதால், தக்காளி சந்தைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைப் பயன்படுத்துவதற்குப் பொங்கல் வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். விலையைக் கட்டுப்படுத்த கூடுதல் எண்ணிக்கையில் லாரிகளை வரவழைக்கலாம் எனவும் அறிவுறுத்தினார்.

தக்காளி இறக்கி ஏற்றும் இடத்தில் சில்லறை - மொத்த விற்பனை செய்யக் கூடாது என்றும், மீறினால் அந்த வாகனங்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தங்கமணிக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு: இதுவரை கிடைத்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.