ETV Bharat / city

பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து

author img

By

Published : Feb 5, 2022, 8:57 PM IST

முன்னுக்குப்பின் முரணான சாட்சியங்கள் காரணமாக, பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு சிறைத் தண்டனையை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து

சென்னை: தருமபுரி மாவட்டம் ஏ. பள்ளிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பள்ளி ஆசிரியர் செந்தில்குமார், மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக, மாணவி ஒருவரின் தந்தை புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்கை விசாரித்த தருமபுரி மகளிர் சிறப்பு நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் செந்தில்குமாருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து 2018ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து செந்தில்குமார் தாக்கல்செய்த மேல்முறையீட்டு வழக்கை, நீதிபதி மஞ்சுளா விசாரித்தார். விசாரணையின்போது, கீழமை நீதிமன்ற விசாரணையின்போது உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவிகளின் வாக்குமூலமும், புகார் அளித்த மாணவியின் தந்தையின் வாக்குமூலமும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளதாகவும், தாமதமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர் செந்தில்குமார் தரப்பில் வாதிடப்பட்டது.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து..
பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனை ரத்து

காவல் துறை தரப்பில், ஆசிரியரின் பாலியல் சீண்டல்கள் தொடர்பாக, தயக்கம் காரணமாக மாணவிகள் தாமதமாகப் பெற்றோரிடம் தெரிவித்ததாகவும், அதைத் தீவிரமாகக் கருத வேண்டியதில்லை என்றும், மாணவிகளின் வாக்குமூலங்கள் தெளிவாக இருப்பதால் தண்டனையை ரத்துசெய்யக் கூடாது என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தீவிரமாகக் கருத வேண்டும் எனவும், குழந்தைகளின் சாட்சியங்கள் முன்னுக்குப் பின் முரணாக இல்லாமல் தெளிவாக இருக்கும் சாட்சியங்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கில் சாட்சியம் அளித்த மாணவி, பாலியல் தொல்லை பற்றி ஏதும் குறிப்பிடவில்லை என்றும், மாணவிகளின் சாட்சியங்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளதாகவும் கூறி, ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்துசெய்து தீர்ப்பளித்தார்.

மேலும், முன்னுக்குப்பின் முரணான ஆதாரங்களுக்கும், சாட்சியங்களுக்கும் உரிய வலுவைக் கொடுக்காவிட்டால் அது நீதி வழங்கும் நோக்கத்தையே வீழ்த்திவிடும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிங்க: கல்லூரி முதலாமாண்டு மாணவி தற்கொலை: காரணம் என்ன?

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.