ETV Bharat / city

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு - Madras HC issued notice order news in Tamil

சென்னை: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பட்டா வழங்கத் தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Restrain temple land convert to patta land, notice order, MHC

author img

By

Published : Dec 31, 2020, 2:18 PM IST

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீசுவரர் கோயில் அமைந்துள்ள மலை அடிவாரத்தை சுற்றி அமைந்துள்ள கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல்செய்துள்ளார்.

அந்த மனுவில், கோயிலைச் சுற்றியுள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்குப் பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மலை அடிவாரத்தில் உள்ள நீர்நிலைகளில் சாயப்பட்டறை கழிவுநீர் கலந்து, பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு கேடு ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளார்.

மலையடி வாரத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக 2018ஆம் ஆண்டே மனு அனுப்பியும் அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தனது மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்க தடைவிதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, 2 வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

இதையும் படிங்க...சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் மூலம் வசூல்:பிப்ரவரி 15 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.