ETV Bharat / city

உள்ளாட்சித் தேர்தல்: தொடங்கியது 2ஆம் கட்ட வாக்குப்பதிவு

author img

By

Published : Oct 9, 2021, 6:24 AM IST

Updated : Oct 9, 2021, 7:00 AM IST

தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களில் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தல், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் 62 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 626 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஆயிரத்து 324 ஊராட்சித் தலைவர்கள், 10 ஆயிரத்து 329 ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.

இத்தேர்தலில் 34 லட்சத்து 65 ஆயிரத்து 724 பேர் வாக்களிக்கின்றனர். இதற்காக ஆறாயிரத்து 652 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. தேர்தல் பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் என சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

அக்டோபர் 6இல் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் 74 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடக்கிறது. மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், கரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாலை 6 மணிக்குள் இறுதிநேரத்தில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் வரும் நிலையில், அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அதை காட்டியும், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஒன்றை காட்டியும் வாக்களிக்கலாம். மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கு வசதியாக வாக்குச்சாவடிகளில் சாய்தளம், சக்கர நாற்காலி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பலத்த பாதுகாப்பு

பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை கண்காணிக்க நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு முடிந்த பின்னர், வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சீலிடப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன. இரு கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் வரும் 12ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

மொத்தம் 74 மையங்களில் 12ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. அந்த இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

இதையும் படிங்க: பதுங்குக் குழியில் 15 நாள்கள்... பகத் சிங் பதுங்கிய வீடு!

Last Updated : Oct 9, 2021, 7:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.