ETV Bharat / city

கரோனாவால் சிங்கங்கள் பாதிப்பு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தீவிர கண்காணிப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கரோனா தொற்றால் சிங்கங்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள புலி,சிறுத்தை, யானைகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
author img

By

Published : Jun 19, 2021, 6:00 PM IST

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் கரோனா தொற்று பாதிப்பால் 3 சிங்கங்கள் உயிரிழந்த நிலையில், மேலும் 5 சிங்கங்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள சரணாலயங்கள், புலிகள் காப்பகங்களில் உள்ள சிறுத்தை, புலி, யானைகள் போன்ற விலங்குகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனவா என கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி 1,485 சதுர கிமீ பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வாழும் காட்டு விலங்குகளை கண்காணிக்க, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் கிருபா சங்கர் தலைமையில் கால்நடை மருத்துவர், உதவி வனப்பாதுகாவலர், வனச்சரக அலுவலர், வனவர், வனக்காப்பாளர் என ஆறு பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புலிகள் காப்பகத்தில் தீவிர கண்காணிப்பு
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்

சத்தியமங்கலம், பவானிசாகர், ஜீரஹள்ளி, தலமலை, தாளவாடி, கேர்மாளம், கடம்பூர் உள்ளிட்ட 10 வனச்சரகங்களில் ஆறு பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவினர் வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களில் தென்படும் யானை,சிறுத்தை,புலிகள் குறித்து கண்காணித்து வருகின்றனர். அதில் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றிய நிலையில் திரிகின்றனவா என்பது குறித்து குழுவினர் ஆடு, மாடு மேய்க்கும் பழங்குடியினரிடம் விசாரித்து வருகின்றனர்.

இரு மாநில எல்லையில் தினந்தோறும் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு குறித்த விரிவான அறிக்கையை தமிழ்நாடு அரசுக்கு வனத்துறை சமர்ப்பித்து வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.