சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நோய்வாய்ப்பட்டிருந்த புவனா (25) என்ற சிங்கம் இன்று (ஜூலை 4) இரவு 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், 25 வயதுடைய புவனா என்கின்ற விஜி என்ற பெண் சிங்கம் மீண்டும் மீண்டும் மலக்குடல் நீழ்ச்சி / தொங்கல் பாதிப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாத காலமாக தொடர் சிகிச்சையில் இருந்தது. வயது முதிர்வு காரணத்தால் மருத்துவ ரீதியாக சரி செய்ய இயலாத நிலை நீடித்தது.
எனவே, அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியம் காரணமாக, தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழுவால் அந்த விலங்குக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வயது முதிர்வு காரணமாக அறுவை சிகிச்சை பலனின்றி இன்று சிங்கம் உயிரிழந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாவிட்டாலும் அழைக்கிறது 'இளைஞர் நகர்'