சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று(ஜூலை.27) முதலமைச்சர் ஸ்டாலினிடம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான புத்தொழில் சூழமைவிற்கான "லீடர்" விருதினைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
டெல்லியில் 4.7.2022அன்று ஒன்றிய அரசின் தொழில் முன்னேற்றம் மற்றும் உள்நாட்டு வணிகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலத்தில் புத்தொழில் சூழமைவினை வலுப்படுத்தும் நோக்கில் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவான செயல்பாடுகளை முன்னெடுத்தற்காக தமிழ்நாட்டிற்கு ''லீடர்'' விருது வழங்கப்பட்டது. முந்தைய ஆண்டுகளில் புத்தொழில் சூழமைவில் வளர்ந்து வரும் மாநிலம் என்ற நிலையிலிருந்து தற்போது “லீடர்” நிலைக்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது.
இந்நிகழ்வின்போது, தலைமைச்செயலாளர் வெ. இறையன்பு; குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண்ராய், தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கத்தின் முன்னாள் இயக்குநரும், தற்போதைய நில நிர்வாக ஆணையருமான எஸ். நாகராஜன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டிக்கான அரசாணை வெளியீடு - இனி காலை மெனு இதுதான்!