இது தொடர்பாக திறந்தநிலைப் பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ திறந்தநிலைப் பல்கலைக்கழகம் டிசம்பர் மாதம் நடத்தக்கூடிய தேர்வுகளுக்கான அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு குறித்த விவரங்களை ’www.tnou.ac.in’ என்ற இணையப் பக்கத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
தேர்வுகள் வரும் 17 முதல் 31 ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறுகின்றன. செய்முறை தேர்வுகள் 12 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 2003 ஆம் ஆண்டு முதல் சேர்ந்த மாணவர்கள் தாங்கள் வைத்துள்ள அரியர் தேர்வுகளை எழுத தற்போது இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கும் 7.5% இடஒதுக்கீடு?