சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள தனியார் அரங்கில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பாஜக சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளர் குஷ்பூ கலந்து கொண்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய குஷ்பூ, “ காங்கிரசில் தேசிய அளவில் பொறுப்பில் இருந்த எனக்கு, தற்போதுதான் இறங்கி வேலை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. பெரிய பொறுப்பில் இருந்தால் ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் வேலை மட்டும் தான் இருக்கும் “ என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ, ”அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளனர். ஆனால் பாஜக தலைமையிலான கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து தலைமை முடிவு செய்து அறிவிக்கும்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஒருவேளை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டால், தாத்தா, அப்பா பெயரை வைத்து வென்று விடலாம் என நினைத்து விடக் கூடாது. அவர் நடிகராக இருக்கலாம். அவருக்கு அரசியலில் என்ன அனுபவம் இருக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும் “ என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு முதலீடுகளுக்கு முழுப்பக்க விளம்பரம் ஒரு கேடா? ஸ்டாலின் தாக்கு!