தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் இணைந்து போட்டியிடுகிறது.
நேற்றிரவு (மார்ச் 10) இருக்கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்படிக்கை கையெழுத்தாகி உள்ளது. இதில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் கும்பகோணம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும்; மூமுக சார்பில் ஸ்ரீதர் வாண்டையாரும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பாஜக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல்