எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தமிழகம் தேசிய அளவில் சிறந்து விளங்குகிறது. தேசிய அளவில் விவசாயத் துறையில் சாதனை புரிந்த கிருஷி கர்மன் விருது வழங்கும் விழா கர்நாடக மாநிலம் தும்கூரில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
இதில் தமிழகம் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தேசிய அளவில் முதலிடம் பெற்றமைக்காக விருதுக்கு தேர்வாகியுள்ளது. இந்த விருதினை பிரதமர் மோடியிடமிருந்து அமைச்சர் ஜெயக்குமார் பெற்றுக்கொண்டார்.