ETV Bharat / city

"பேனரை கிழிக்கனும்னா நேரில் வந்து கிழிப்போம்" - கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி - பன்னீர்செல்வம்

அதிமுக பொதுக்குழு நடைபெறும் இடத்தில் பேனர்களை கிழித்ததாக பெஞ்சமின் கூறிய குற்றச்சாட்டை எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.

கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி
கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி
author img

By

Published : Jun 23, 2022, 7:52 AM IST

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓ.பி.எஸ். இல்லத்தில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , "இன்று (ஜூன்23) ஓபிஎஸ் பொதுக்குழு செல்ல வாய்ப்புகள் இருப்பதால் நேற்று மாலை நாங்கள் மண்டபத்திற்கு சென்றோம். எங்களை பாதி வழியில் காவல்துறையினர் வழிமறித்தனர். நிபந்தனையுடன் மண்டபம் அருகில் அனுமதித்தனர். அடியாட்கள் 100 பேர் மண்டபத்தில் இருக்கின்றனர்.

என்னுடன் 10 மகளிர் அணியினர் வந்து பேனர்களை கிழித்ததாக பெஞ்சமின் கூறுகிறார். இதுபோன்ற சில்லரை வேலைகளை எங்கள் தலைவர் செய்ய சொல்லமாட்டார். அந்த தலைவர் வேண்டுமென்றால் செய்ய செல்வார். கிழிக்கனும்னா நேரில் வந்து கிழிப்போம், யாராக இருந்தாலும் வா.. நேரில் சந்திப்போம்.

மீண்டும் மண்டபத்திற்கு செல்வோம், இரண்டில் ஒன்று பார்ப்போம் என்றும் எங்கள் தலைவர் குழந்தை போன்றவர். பொதுக்குழுவிற்கு செல்லக்கூடாது என எங்கள் தரப்பில் கடிதம் எதுவும் எழுதப்படவில்லை" என்று கூறினார்.

இதையும் படிங்க: 'அதிமுகவில் இரட்டை தலைமையே தொடரும்' - கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.