ETV Bharat / city

உயர் பொறுப்பிலிருக்கும் சிலர் என்னை ஓரம் கட்டுகிறார்கள் - குஷ்பூ புகார் - Khusbhu Sundar to join BJP

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியது ஏன் என்பதை அக்கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் விரிவாக தெரவித்துள்ளார் குஷ்பூ

குஷ்பு விளக்கம்
குஷ்பு விளக்கம்
author img

By

Published : Oct 12, 2020, 10:33 AM IST

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளராக பதவி வகித்த குஷ்பூ, அக்கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராகவும், தேசிய செய்தித் தொடர்பாளராகவும் எனக்கு தாங்கள் அளித்த வாய்ப்புக்கு நன்றி.

மிகவும் சிக்கலான காலக்கட்டத்தில் கட்சியை பல்வேறு தளங்களில் பிரதிநிதித்துவம் செய்ததில் நான் பெருமை கொள்கிறேன். 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து, துவண்டிருந்த காலக்கட்டத்தில் நான் கட்சிக்குள் வந்தேன். பெயர், பொருள், புகழ் போன்ற எந்தவித எதிர்பார்ப்புடனும் நான் கட்சிக்குள் வரவில்லை.

சோனியா காந்திக்கு குஷ்பு கடிதம்
சோனியா காந்திக்கு குஷ்பூ கடிதம்

மக்களுடன், களத்துடன் தொடர்பில்லாமல், கட்சியின் உயர் பொறுப்பிலிருக்கும் சிலர், தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றனர். என்னைப்போன்று கட்சிக்கு அர்ப்பணிப்புடன் உழைக்க விரும்பும் பலரை ஒடுக்கி, அவர்கள் ஓரம்கட்டப்பார்க்கின்றனர்.

இந்த சூழலை நீண்டகாலமாகச் சந்தித்துவரும் நான், தற்போது கட்சியுடனான தொடர்பை முறித்துக்கொள்ள விரும்புகிறேன். எனவே, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்கிறேன். இந்தத் தருணத்தில், உங்களுக்கும், ராகுல் காந்திக்கும், மற்ற அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் மீதான நன்மதிப்பு என்றும் மாறாது. நன்றி குஷ்பூ சுந்தர்" என எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: ட்ரம்புக்கு கரோனா: அதிர்ச்சியில் மரணமடைந்த ரசிகர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.