சென்னை: காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் பார்மலின், ரசாயன கலவைகள் கலந்து மீன் விற்கப்படுகிறதா என்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் இன்று (செப்.4) காலையில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் சென்னை உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் 10க்கும் மேற்பட்டோர் இன்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது கெட்டு போன 50 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு கிருமி நாசினி கொண்டு அழிக்கப்பட்டன. மேலும் 12 வகையான மீன்களை அலுவலர்கள் பறிமுதல் செய்து ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.
ஆய்வின் முடிவில் கிடைக்கும் அறிக்கையின் அடிப்படையில் மீன் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.