ETV Bharat / city

கறுப்பர் கூட்டம் வழக்கு - அரசு பதிலளிக்க ஆணை! - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்ததாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து, கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

koottam
koottam
author img

By

Published : Aug 26, 2020, 1:26 PM IST

கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்த புகாரின்பேரில், கறுப்பர் கூட்டம் யூ-ட்யூப் சேனலைச் சேர்ந்த சுரேந்திரன், செந்தில்வாசன் உள்ளிட்ட நால்வரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களில் சுரேந்திரனை குண்டர் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சுரேந்திரனின் மனைவி கிருத்திகா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், 'கலாசாரம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும், கல்வியறிவின்மை, அறியாமையை ஒழிக்கவும் பல்வேறு தகவல்களை வெளியிட்ட தனது கணவரை குண்டர் சட்டத்தின் கீழ், சிறையில் அடைத்தது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது.

ஒரே ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்துள்ள நிலையில், குண்டர் சட்டத்தை பயன்படுத்தியது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அவசர கதியில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது சட்டப்படியும், இயற்கை நீதிக்கும் முரணானது' என தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வு, மனு குறித்து 4 வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

இதையும் படிங்க: பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் முக்கண் விநாயகர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.