ETV Bharat / city

தலைகீழ் மாற்றம் எப்படி? குஷ்புக்கு குட்லக் சொல்லி கேள்வி எழுப்பிய கார்த்தி சிதம்பரம்

author img

By

Published : Oct 12, 2020, 11:03 AM IST

காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணையவுள்ள குஷ்பூவுக்கு குட்லக் சொல்லி கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்.

Karti P Chidambaram
Karti P Chidambaram

காங்கிரஸ் கட்சியிலிருந்து குஷ்பு விலகியுள்ள நிலையில், அவர் பாஜகவில் இணையவுள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சூசகமாகப் பதிவு ஒன்றை கார்த்தி சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், 180 டிகிரி திரும்புவது என்பது மிகவும் சவாலான காரியம் என்றுள்ளார். அதாவது, காங்கிரலிருந்து விலகி பாஜகவில் இணைவது என்பது தலைகீழ் மாற்றம். இதை செய்வது எப்படி என்ற தொனியில் கேள்வி எழுப்பியுள்ளார். அதேவேளை, குஷ்பூவுக்கு குட்லக் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்விட்டர் பதிவில் அவர், காங்கிரஸ் கட்சியினர், ஐடி, சமூக வலைதள அணியினர் திங்கள் கிழமை காலையில் பழைய ட்வீட்டுகள், விவாதங்கள் போன்றவற்றைத் தோண்டி, நேரத்தை வீணடிக்க வேண்டாம். செய்ய வேண்டிய வேலை நிறைய உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரம் ட்வீட்
கார்த்தி சிதம்பரம் ட்வீட்

முன்னதாக, நேற்றிரவு குஷ்பூ டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்ட நிலையில், அவர் பாஜகவில் இணைகிறார் எனக் கூறப்பட்டது. இன்று காலை அவர், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தான் கட்சிலிருந்து விலகுவதாகக் கூறி ராஜினாமா கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: உயர் பொறுப்பிலிருக்கும் சிலர் என்னை ஓரம் கட்டுகிறார்கள் - குஷ்பூ புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.