மெரினா கடற்கரையில் உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்த பின்பு கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாட்டில் சின்னக் கருத்தை சொன்னால்கூட பெரிதாக பேசுகிறார்கள். திராவிட இயக்கத்தில் 6 கோஷ்டிகள் உள்ளன. ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் முரசொலியில் எழுத வேண்டியதுதானே, ரஜினியிடம் லெப்ட்ல வைச்சுக்கோங்க, ரைட்ல வச்சுக்கோங்க, நேராக வைத்துக்கொண்டால் அரசியலில் தோற்றுவிடுவீர்கள்.
ரஜினியை நடிகர் என்று கூறும் ஸ்டாலின் 1996ஆம் ஆண்டு மேயராவதற்கு ரஜினியின் படத்தை பயன்படுத்தியது ஏன். ரஜினி ஆன்மீக அரசியல் செய்வதாக கூறுகிறார்கள். ஆனால், ரஜினி சுயமாக பேசக்கூடியவர். அவரது வீட்டை 10 பேர், 20 பேர் முற்றுகையிட்டு பூச்சாண்டி காட்டுகிறார்கள். ரஜினிக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஸ்டாலின்தான் பாஜகவிற்கு ஆதரவாக டெல்லியில் காங்கிரஸ் கூட்டிய சிஏஏ எதிர்ப்பு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை” என்றார்.
இதையும் படிங்க: 'மாணவர்களை பற்றி கவலைப்படாமல் ரஜினி பேச்சு தேவையா?' - பிரபல மனநல மருத்துவர் வேதனை