ETV Bharat / city

'லட்சத்தீவில் மக்கள் விரோத நடவடிக்கை' - கமல் கடும் கண்டனம் - peace of people of Lakshadweep

லட்சத்தீவில் பிரபுல் பட்டேலால் இயற்றப்படும் மசோதாக்கள் மக்கள் விரோத சட்டங்களாக, குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்கிறது. புதிய சட்டங்கள் லட்சத்தீவின் அழகையும், மக்களின் உரிமைகளையும் அழிப்பதாக உள்ளது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசன்
கமல் ஹாசன்
author img

By

Published : May 27, 2021, 9:09 PM IST

Updated : May 27, 2021, 10:18 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரபுல் பட்டேல் லட்சத்தீவின் நிர்வாகியாக பொறுப்பேற்ற நாள் முதலே அங்கு அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது. புதிதாக இயற்றப்படும் மசோதாக்கள் மக்கள் விரோதமாக, குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதே இச்சூழலுக்கு காரணம். எல்டிஏ மசோதா பூர்வகுடிகளின் வாழ்விடங்களை பறிக்கும் அபாயம் இருப்பதால் பழங்குடியின மக்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். பாசா சட்டம் தம் உரிமைகளுக்காக போராடுபவர்களின் குரலை ஒடுக்கும் அடக்குமுறை சட்டமாக இருக்கிறது.

இஸ்லாமியர்களின் அச்சம் நியாயமானது

லட்சத்தீவு பகுதியில் உள்ள அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுகளில் அசைவ உணவு இடம்பெறாது எனும் அறிவிப்பு உள்நோக்கம் உடையது. மாட்டிறைச்சி பயன்பாட்டிலும் அரசின் தலையீடு இருக்குமோ எனும் இஸ்லாமியர்களின் அச்சம் நியாயமானது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களின் குடும்பத்தில் இருந்து கிராம பஞ்சாயத்துகளில் உறுப்பினராகவோ, பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது எனும் மசோதா ஜனநாயகத்துக்கு எதிரானது.

கமல் ஹாசன் அறிக்கை
கமல் ஹாசன் அறிக்கை

கரோனா தடுப்பு நடவடிக்கையிலும் பிரபுல் பட்டேலின் நிர்வாகம் சோபிக்கவில்லை. கடந்த ஆண்டு கொரொனா தொற்றே இல்லாத லட்சத்தீவில், கட்டவிழ்த்து விடப்பட்ட தளர்வுகள் இன்று உயிர்களை காவு வாங்குகின்றன. புதிய சட்ட விதிமுறைகள் லட்சத்தீவின் அழகையும், சுற்றுச்சூழலையும், மக்கள் உரிமைகளையும் ஒருசேர அழிப்பதாக உள்ளது. லட்சத்தீவு மக்களின் நிம்மதியை சீர்குலைக்கும் செயல்களை உடனே நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க;

'அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கிறது!'- உயர் நீதிமன்றம் பாராட்டு

Last Updated : May 27, 2021, 10:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.