சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் குறித்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கள்ளக்குறிச்சிக்கு செல்ல இருக்கும் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். முதலில் மாணவியின் தாய், தந்தையரிடம் இருந்து விசாரணையை துவக்குவதற்கு தமிழ்நாடு மாநில குழந்தை பாதுகாப்பு ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை ஆணையத்தில் தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார், துரைராஜ், முரளி ஆகியோர் உள்ளனர். இந்தக் குழுவினர் முதலில் மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறவும், அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரணை செய்த அதிகாரியிடம் விசாரணை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். விசாரணை அறிக்கையினை தமிழ்நாடு அரசுக்கும் இந்த குழு அளிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி கலவரம் - விசாரிக்க 18 பேர் கொண்ட குழு அமைப்பு