ETV Bharat / city

‘இது ஒன்றும் ஏகலைவன், துரோணாச்சாரி காலமல்ல - இது பெரியார் மண், திராவிட பூமி’

சென்னை: தமிழ்நாடு பெரியார் மண், திராவிட பூமி என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

veeramani
author img

By

Published : Sep 4, 2019, 10:39 PM IST

இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்துக் கூறியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் வெடித்துக் கிளம்பியதையடுத்து, அதனை அவர் மீண்டும் திரும்ப பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், கடும் எதிர்ப்புகள் கிளம்பியவுடன் அதிலிருந்து இப்பொழுது பின்வாங்குவது வரவேற்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது ஒன்றும் ஏகலைவன், துரோணாச்சாரி காலமல்ல என்றும், இது பெரியார் மண், திராவிட பூமி என்பதை மறக்கவேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், ‘படமெடுத்துக் கொத்தலாம்’ என்ற நோக்கத்துடன் வெளிவந்த நாகப்பாம்பு மீண்டும் தன் புற்றுக்குள்ளே தலையை இழுத்துக்கொண்டது போல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல் இருப்பதாகவும், வியாக்கியானங்கள் பேசிவிட்டு, பின்னர் மறுப்புகள் கூறுவது வாடிக்கையான வேடிக்கைகளே எனவும் கி.வீரமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்துக் கூறியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் வெடித்துக் கிளம்பியதையடுத்து, அதனை அவர் மீண்டும் திரும்ப பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், கடும் எதிர்ப்புகள் கிளம்பியவுடன் அதிலிருந்து இப்பொழுது பின்வாங்குவது வரவேற்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது ஒன்றும் ஏகலைவன், துரோணாச்சாரி காலமல்ல என்றும், இது பெரியார் மண், திராவிட பூமி என்பதை மறக்கவேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், ‘படமெடுத்துக் கொத்தலாம்’ என்ற நோக்கத்துடன் வெளிவந்த நாகப்பாம்பு மீண்டும் தன் புற்றுக்குள்ளே தலையை இழுத்துக்கொண்டது போல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல் இருப்பதாகவும், வியாக்கியானங்கள் பேசிவிட்டு, பின்னர் மறுப்புகள் கூறுவது வாடிக்கையான வேடிக்கைகளே எனவும் கி.வீரமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Intro:Body:

திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி சமூக நீதி  அறிக்கை





ட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். கருத்துக்கு கிளம்பிய எதிர்ப்பால், 





ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பும், ‘விஜயபாரத’ங்களும் பின்வாங்குகின்றன





இது ஏகலைவன்; துரோணாச்சாரியார் காலமல்ல





இப்பொழுது எடுத்துள்ள முடிவிலாவது உறுதியாக இருங்கள்!





இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கருத்துக் கூறிய நிலையில், கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியவுடன் இப்பொழுது அந்த நிலையிலிருந்து பின்வாங்குவது வரவேற்கத்தக்கது - இது ஒன்றும் ஏகலைவன், துரோணாச்சாரி காலமல்ல - இது பெரியார் மண், திராவிட பூமி என்பதை மறக்கவேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:





சேலத்தில் நாம் நடத்திய (ஆகஸ்ட் 27, 2019) திராவிடர் கழக பவள விழா மாநாடும், அதற்குமுன் நாம் சமூகநீதிக்கு - இட ஒதுக்கீட்டிற்கு - ஆர்.எஸ்.எஸ். தலைமையால் ஏற்பட்டுள்ள ஆபத்தினை எச்சரித்து விடுத்த அறிக்கையும், அதையொட்டி தமிழ்நாட்டு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் அனைவரும் ஒரே குரலால் சமூகநீதியைப் பாதுகாப்போம்; அதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயங்கோம் என்று சூளுரைத்ததும் உடனடியாக நல்ல பலனைத் தந்துள்ளது.





‘படமெடுத்துக் கொத்தலாம்‘ என்ற நாகப்பாம்பு மீண்டும் தன் புற்றுக்குள்ளே தலையை இழுத்துக்கொண்டு உள்ளே போவதுபோல் காட்டியுள்ளது.





‘விஜயபாரத’த்தின் வியாக்கியானங்கள்





ஆர்.எஸ்.எஸ். தமிழ் வார ஏடான ‘விஜயபாரதம்‘ (6.9.2019) ஏட்டில், ஒரு திடீர் பல்டி, வியாக்கியானங்கள் - விளக்கங்கள் - மறுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன - ஆர்.எஸ்.எஸ். திரு.மோகன் பாகவத் கூறியதாக.

‘‘எஸ்.சி., எஸ்.டி.,  ஓ.பி.சி., சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம் ஆர்.எஸ்.எஸ்.’’ என்ற தலைப்பில் அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.





இப்படி ஆர்.எஸ்.எஸ். தலைவர் இட ஒதுக்கீட்டினை ஒழித்திடும் - அக்கட்சியின் உள்ளத்துக் கொள்கை உணர்வை - இலக்கைத் திடீரென்று வெளியிட்டு, அதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியவுடன், பின்வாங்கி விளக்கங்கள், 





வியாக்கியானங்கள், மறுப்புகள் கூறுவதும் வாடிக்கையான வேடிக்கைகளே!





சில ஆண்டுகளுக்குமுன் (2015) பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், இட ஒதுக்கீட்டை எதிர்த்துப் பேசி, அதற்கு நிதிஷ்குமார், லாலுபிரசாத், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அய்க்கிய ஜனதா தளத்தின் அன்றைய தலைவர் சரத் யாதவ் போன்றவர்கள் கண்டனம் எழுப்பியவுடன், எங்கே அத்தேர்தலில் தோல்வி ஏற்படுமோ என்ற அச்சம் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். கூட்டணியினரை உலுக்க, ஆர்.எஸ்.எஸ். தலைவரே அதில் பின்வாங்கினார்.





பிரதமர் மோடி இட ஒதுக்கீடு தொடரும் என்றார்!





‘புல்டோசர் மெஜாரிட்டி’யைப் பெற்றுவிட்ட தைரியத்தால்,  ஆர்.எஸ்.எஸ்.  தனது பல கொள்கைகளை வேக வேகமாக சட்டமாக்கிட துடித்துச் செயல்படும் இந்த அசாத்திய வேகத்தில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் டில்லி நிகழ்ச்சியில், இட ஒதுக்கீடு தொடருவதா? வேண்டாமா? என்பதுபற்றிய விவாதம் ‘‘ஒரு நல்ல சூழ்நிலையில்’’ நடத்தப்படவேண்டும் என்று பேசியது  - அவர்களது அதிகாரபூர்வ ஆங்கில வார ஏடு ‘ஆர்கனைசர்’ உள்பட பலவற்றிலும் வெளிவந்துள்ளது.

அதைச் சுட்டிக்காட்டித்தான், சமூகநீதி காக்கும் உரிமைப் போருக்கு நாமும், நாடும் ஆயத்தமாக வேண்டும் என்று கூறினோம்!





சேலம் பவள விழா மாநாட்டுத் தீர்மானம்





சேலம் பவள விழா மாநாட்டில் (27.8.2019) நிறைவேற்றப்பட்ட 25 முக்கிய தீர்மானங்களில், மிகவும் முக்கியமானது 5 ஆவது தீர்மானம் (அய்ந்தாவது தீர்மானத்தை கீழே காண்க). உடனடியாக ஊசி மருந்து வேலை செய்திருப்பதுபோல், வேலை செய்ததின் விளைவே ஆர்.எஸ்.எஸ். தலைமையின் விளக்கமும், மறுப்பும்!





‘‘எப்போதும் விழிப்பாயிருப்பதே நம் சுதந்திரத்திற்கு நாம் கொடுக்கும் விலையாகும்‘’  (Eternal vigilance is the price for our liberty).

சமூகநீதிக்கு ஆபத்து அடிக்கடி ஏற்பட்டே வரும்; காரணம், கட்சி அரசியல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு, நாட்டின் சக்திகள் ஒருமுனைப்படுத்தப்பட்டுள்ளன (Polarisation).





1. சமூகநீதிக்கு ஆதரவாக அதனைப் பாதுகாக்கும் அணி. 

2. மற்றொன்று சமூகநீதியை எதிர்த்து ஒழிக்க எப்போதும் சந்தர்ப்பங்களை எதிர்நோக்கும் அணி.





நாம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளபடி, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானப் பகுதி - இட ஒதுக்கீடு- இதில் கைவைக்க எவருக்கும் உரிமையில்லை. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பட்டியலில் உள்ள ஒன்று இது.





இது சலுகையோ, பிச்சையோ அல்ல!





காலங்காலமாக பாதிக்கப்பட்ட மக்களைத் தூக்கிவிடத் தரப்பட்ட மகத்தான  மின்தூக்கிகளே!





கல்வியும், உத்தியோகமும் நமது உரிமைகள்!





கல்வியும், உத்தியோகமும் எங்கள் பிறப்புரிமைகள் ஆகும்!

மத்திய  அரசே, நீங்கள் மற்ற விடயங்களில் உங்கள்  ‘‘சித்துக்களை’’ - அரசியல் விளையாட்டை வைத்துக் கொள்ளுங்கள்; இட ஒதுக்கீடு - சமூகநீதி என்ற கோடானுகோடி மக்களின் கல்வி, உத்தியோக வாழ்வுரிமை ‘மூச்சுக் காற்றினை’ நிறுத்திடும் விபரீத வேலைகளில் ஈடுபடாதீர்கள்! இது நெருப்போடு விளையாடும் ஆபத்தாக முடியும் என்பதை சமூகநீதியையே தனது சுவாசப் பையாகக் கொண்ட திராவிடர் கழகம் சுட்டிக்காட்ட விழைகிறது!





இந்த நிலைப்பாட்டில் இனியாவது உறுதியுடன் இருங்கள். எங்களுக்கு (தி.க.வுக்கு) என்றும் அரசியல் பார்வை கிடையாது!

துரோணாச்சாரிகள் - ஏகலைவன் காலம் அல்ல இது. பெரியார்  - அம்பேத்கர் ஊட்டிய உணர்வால் பக்குவப்பட்ட தன்னல மறுப்பாளர்கள் செயல்படும் காலம், மறவாதீர்!





தமிழ்நாடு திராவிட மண் - பெரியார்  பூமி!





தமிழ்நாடு திராவிட மண் - பெரியார் பூமி, சமூகநீதிக்கான பாதுகாப்புப் பாசறை என்பதால், முதல் குரல்  எழும் - இது 1951 முதலே தொடரும் வரலாறு! புரிந்துகொள்வீர்!

 



கி.வீரமணி



தலைவர், திராவிடர் கழகம்





4.9.2019 சென்னை



------------------------------





சேலம்: திராவிடர் கழக பவள விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் (27.8.2019)





தீர்மானம் எண் 5 : 





சமூகநீதிக்கு என்றுமே எதிரான  பார்ப்பன சக்திகளின் போக்கு





நீண்டகாலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்டு வந்த ஒடுக்கப்பட்டமக்களுக்கு இடஒதுக்கீடு என்பது சமூக நீதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திராவிட இயக்கக் கோட்பாடாகும். இந்த சமூகநீதிக்குத் தொடக்க முதலே பார்ப்பனர்களும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளும் எதிர்ப்பாகவே இருந்து வந்துள்ளன.

மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்தக் கூடாது என்று பார்ப்பன சங்கத்தார் உண்ணாவிரதம் இருந்த நிலையில், அதனை எதிர்த்து திராவிடர் கழகம் உண்ணும் போராட்டத்தை நடத்தி, பார்ப்பனசங்கத்தின் நோக்கம் முறியடிக்கப்பட்டது.

மண்டல் குழுப் பரிந்துரைகளில் வேலைவாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் நாடாளுமன்றத்தில் பிரகடனப் படுத்திய காரணத்தால், அதுவரை வெளியிலிருந்து வி.பி.சிங் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து வந்த பி.ஜே.பி., தன் ஆதரவை விலக்கிக் கொண்டு, வி.பி.சிங் தலைமையிலான சமூகநீதி ஆட்சியைக் கவிழ்த்தது என்பதைத் தெரிந்துகொண்டால், சமூகநீதியின் மீது இச்சக்திகளுக்குள்ள வெறுப்பு-எதிர்ப்பு வெளிப் படையாகவே தெரியவரும்.

ஆர்.எஸ்.எஸின் ‘பஞ்சான்யா இதழுக்கு (20.9.2015) ஆர்.எஸ்.எஸ்.  தலைவர் மோகன் பாகவத் அளித்த பேட்டியில், இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

திராவிடர் கழகம் உள்ளிட்டகட்சிகள், தலைவர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில், அப்பொழுது பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நேரம் என்பதால், கடும் பாதிப்பு பி.ஜே.பி.க்கு ஏற்படும் என்ற நிலையில், தனது கருத்தினை விலக்கிக் கொண்டதாகப் பாசாங்கு செய்தார்.

இப்பொழுதும் அதே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் மீண்டும் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றுகூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப்பலம் இருக்கும் ஒரே காரணத்தால், இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கருதி, அவர்களின் நிகழ்ச்சி நிரலை அவசர அவசரமாக நிறைவேற்றிடத் துடித்துக் கொண்டுள்ளனர். அதன் வெளிப்பாடே ஆர்.எஸ்.எஸ்.தலைவரின் கருத்தாகும்.

இடஒதுக்கீடு என்பது பேச்சுவார்த்தைகளுக்கோ விவாதப்பொருளுக்கோ (Not Negotiable) அப்பாற் பட்டது என்று 1981 ஆம் ஆண்டிலேயே மத்தியஅரசால் அறிவிக்கப்பட்டஒன்றாகும்.

இந்தநிலையில், உயர்ஜாதி ஆதிக்க எண்ணமுடைய மத்திய பி.ஜே.பி. அரசு, இடஒதுக்கீட்டில் கை வைக்கத் துணிந்தால், நாட்டில் மிகப்பெரிய கிளர்ச்சி எரிமலை வெடிக்கும் என்றுஇம்மாநாடு எச்சரிக்கிறது.

கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழ்நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்து இந்தியாவுக்கே வழிகாட்டும் நிலை உருவாகும் என்றும் மேலும் இம்மாநாடு அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்கிறது.

விரைவில் சமூகநீதியாளர்களை ஒருங்கிணைத்து பிரச்சாரம், போராட்டம் என்ற வகையில் உரிய நடவடிக் கைகளை திராவிடர் கழகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளும் என்றும் இம்மாநாடு திட்டவட்டமாக பிரகடனப்படுத்துகிறது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.