சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினரின் பரப்பரைப் பயணம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் தொடர்ந்து தொகுதிகள் வாரியாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் திமுகவிற்கு ஆதரவாக மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை, மருமகன் மனோஜ், தங்கை செந்தாமரை ஆகியோர் தேர்தல் பரப்புரை மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக, அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அவர்கள் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். இன்று (மார்ச்.26) முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை இடைவிடாது ஒன்பது நாள்களுக்கு அவர்கள் பரப்பரையில் ஈடுபடுகின்றனர்.