சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (ஏப். 6) தொடங்கியது. இந்நிலையில், கேள்வி நேரத்தின்போது, வேலூர் அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார், "ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்ததில், வேலூரில் இருந்த தொழிற்பூங்கா ராணிபேட்டை மாவட்டத்திற்கு சென்றுவிட்டது.
இதனால், வேலூரில் உள்ள படித்த இளைஞர்கள் மீண்டும் வேலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். வேலூர் மாவட்டத்தில் தொழிற்பூங்கா அமைக்க அரசு முன்வர வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேலூர் மாவட்டத்தில் தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 2022-2023ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் போது, வேலூரில் தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியதை அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: பெட்ரோல் விலை உயர்வு வருமானம் பிரதமரின் கஜானாவுக்கு செல்கிறது - அமைச்சர் மெய்யநாதன்