ETV Bharat / city

கவர்ச்சி விளம்பரம்; ஆருத்ரா கோல்ட் கம்பெனியில் சோதனை: ரூ.3.5 கோடி பறிமுதல் - IT Department raid in Aarudhra Gold Company

கவர்ச்சி விளம்பரங்களை பரப்பிய ஆருத்ரா கோல்ட் கம்பெனியில் நடத்திய சோதனையில் ரூ.3.5 கோடி பணம், 60 சவரன் நகை உள்ளிட்டவற்றை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆருத்ரா கோல்ட் கம்பெனியில் சோதனை
ஆருத்ரா கோல்ட் கம்பெனியில் சோதனை
author img

By

Published : May 25, 2022, 8:35 AM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல கிளைகளை கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட். இந்த நிறுவனம் நகை மீதான் கடன் மற்றும் முதலீடு உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வட்டியாக தரப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது.

இந்த கவர்ச்சி விளம்பரத்தை பார்த்து ஏராளமான பொதுமக்கள் பணத்தை செலுத்தி வந்தனர். ஆர்.பி.ஐ அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடி செய்வதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களான பாஸ்கர், மோகன்பாபு, உஷா, ஹரிஷ், செந்தில்குமார், ராஜசேகர், பட்டாபிராமன், மைக்கெல் ராஜ் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பாக ஆருத்ரா கோல்ட் டிரெடிங் கம்பெனிக்கு சொந்தமான சென்னை உட்பட 26 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று (மே. 24) சோதனை மேற்கொண்டனர். அதிக வட்டி தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து பொதுமக்களிடம் பணம் பெற்று இந்த நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் இந்த சோதனையில் 48 கம்ப்யூட்டர், 6 லேப்டாப், 44 மொபைல் போன்கள், 60 சவரன் தங்கம், 2 கார்கள், ரூ.3.41 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக கடந்த 1 வருடங்களாக கவர்ச்சி விளம்பரங்களை பரப்பிய நிறுவனத்தின் இயக்குநர்களான பாஸ்கர் மற்றும் மோகன்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிறுவனம் மூலமாக ஏமாந்தோர் மெயில் மூலமாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் அளிக்கலாம் எனவும் ஆர்.பி.ஐ அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் மட்டுமே பொதுமக்கள் முதலீடு செய்ய வேண்டும் என்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.