ETV Bharat / city

ஐபிஎஸ் அலுவலர் விஜயகுமாருக்கு வரித் துறை அனுப்பிய நோட்டீசை ரத்துசெய்து உத்தரவு - ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமாருக்கு வரித் துறை அனுப்பிய நோட்டீசை ரத்து

சென்னை: சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்ட மூத்த ஐபிஎஸ் அலுவலர் விஜயகுமாருக்கு, வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீசை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
author img

By

Published : Feb 27, 2020, 11:10 PM IST

2004ஆம் ஆண்டு சந்தனக்கடத்தல் வீரப்பனை வீழ்த்திய ஐபிஎஸ் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான அதிரடிப்படையினருக்குத் தமிழ்நாடு அரசு, 54 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பில், 773 வீட்டுமனைகளை ஒதுக்கீடு செய்தது. இதில், விஜயகுமாருக்கு அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில், ஒரு கோடியே எட்டு லட்சம் ரூபாய் மதிப்பில் நிலம் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலத்தை அவர், 2009ஆம் ஆண்டு ஒரு கோடியே 99 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இதன்மூலம் கிடைத்த வருமானத்திற்கு வரி செலுத்தும்படி, அவருக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசை எதிர்த்து விஜயகுமார் தாக்கல்செய்தார். மேலும், தாக்கல்செய்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வீரப்பனுக்கு எதிரான வேட்டையில் பங்காற்றிய அவரது பணியைப் பாராட்டி, மாநில அரசு இந்தப் பரிசை வழங்கியுள்ளது.

மேலும், பொது நலனுக்கு சேவையாற்றியவர்களுக்கு வழங்கப்படும் பரிசுப் பொருள்களுக்கு வருமானவரிச் சட்டத்தில் வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, விஜயகுமாருக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீசை ரத்துசெய்ய உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ‘பிறந்தநாளன்று நேரில் வர வேண்டாம்’ - திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.